• India
```

ஒரு தடவ சார்ஜ் பண்ணா...6 மாசத்துக்கு சார்ஜ் நிக்கிற மாறி...ஒரு மொபைல் வேணுமா...கண்டிப்பா இந்த தொகுப்ப பாருங்க...!

Oukitel WP100 Price And Specification

By Ramesh

Published on:  2025-02-24 10:15:48  |    201

Oukitel WP100 Titan - அது எப்படி ஒரு தடவ மொபைல்க்கு சார்ஜ் பண்ணா 6 மாசத்துக்கு சார்ஜ் நிக்கும், அப்படிங்கிறத தெரிஞ்சிக்கனும்னா கண்டிப்பா இந்த தொகுப்ப முழுசா பாருங்க.

சீனாவை மையமாக கொண்டு உலகளாவிய அளவில் செயல்பட்டு வரும் Oukitel என்ற நிறுவனம் 2007 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு சர்வதேச அளவில் மொபைல்கள், ஸ்மார்ட் வாட்ச்கள், எலக்ட்ரானிக்ஸ் பொருள்களை சந்தைப்படுத்தி வருகிறது, கிட்டத்தட்ட 150 நாடுகளுக்கு மேல் செயல்பட்டு வரும் Oukitel நிறுவனம் Rugged ஸ்மார்ட் போன்களுக்கு பெயர் போன நிறுவனம் ஆக அறியப்படுகிறது.

அந்த வகையில் இந்த Oukitel தற்போது வெளியிட்டு இருக்கும் Oukitel WP 100 என்ற Rugged மொபைல் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது, சரி அப்படி என்ன தான் இருக்கு இந்த மொபைல்ல அப்படின்னு கேட்டீங்கன்னா, 33,000 mAh பேட்டரி, அதாவது ஒரு த்டவ சார்ஜ் போட்டீங்கன்னா கிட்டத்தட்ட 6 மாசம் சார்ஜே போடாம உங்களால பயன்படுத்த முடியும்.



அது மட்டும் இல்லாமல் இந்த மொபைல்ல 100 Lumens பவர் கொண்ட புரொஜக்டர் வசதி இருக்கு, 1200 Lumens பவர் கொண்ட கேம்பிங் லைட் இருக்கு, 18 வாட் ரிவர்ஸ் சார்ஜிங் ஸ்பெசலிட்டி இருக்கு, பிராசசர் பொறுத்தவரைக்கும் பவர்புல்லான Mediatek Dimensity 7300 யூஸ் பண்ணி இருக்காங்க, மெமோரிய பொறுத்த வரைக்கும் 16GB RAM + 256GB ROM யூஸ் பண்ணி இருக்காங்க.

மெயின் கேமராவோட பிக்ஸல்ஸ் 200MP, பக்காவான கிளாரிட்டியோட படம் பிடிக்குமாம், 66 வாட் பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட்டோடையும் மொபைல் வருது, பொதுவாக ட்ராவலர்ஸ்க்கு ஏத்த பெஸ்ட் மொபைல்னு சொல்லலாம், சரி இந்த மொபைலோட விலை என்னனு கேட்டீங்கன்னா, 599 அமெரிக்க டாலர்னு சொல்றாங்க, இந்திய மதிப்புல கிட்டத்தட்ட 52,000 ரூபாயை நெருங்கும், 

" பேட்டரி 33,000 mAh னா சார்ஜ் ஏற எவ்ளோ நேரம் எடுத்திக்கிடும்னு கேட்டீங்கன்னா, அவங்க கொடுத்து இருக்கிற 66W சார்ஜர் மூலமா சார்ஜ் ஏத்தினா 100% சார்ஜ் ஏறுறதுக்கு 4 மணி நேரம் ஆகலாம் "