Google CEO: 25% Google software Designed By AI - உலகளாவிய அளவில் தினசரி 8.5 பில்லியன் தேடல்கள் கூகுளில் நிகழ்கிறது, ஒவ்வொரு வினாடிக்கும் கிட்டதட்ட 1 இலட்சம் தேடல்கள் கூகுளில் நிகழ்கிறது, இந்தியாவில் அதிகபட்சமாக 92.9 சதவிகிதம் பேர் கூகுளை தேடுபொறியாக பயன்படுத்துகின்றனர். உலகளாவிய அளவில் மொபைல் பயன்படுத்துபவர்கள் 90 சதவிகிதம் எதையாவது தேடுவதற்கு கூகுளை தான் பயன்படுத்துகின்றனர்.
இவ்வாறாக கூகுள் உலகளாவிய மக்களின், ஒரு தினசரி அங்கமாகவே இருந்து வருகிறது, இந்த கூகுளின் இந்த தினசரி செயல்பாட்டிற்கு பின்னால் கிட்ட தட்ட 1.80 இலட்சம் பணியாளர்களின் ஒரு மிகப்பெரிய உழைப்பு இருக்கிறது. ஆனால் தற்போது அந்த நம்பருக்கு பதில் AI என்ற உருவம் இல்லா ஒரு நுண்ணறிவு செயல்பட்டு பல பொறியாளர்களின் இடத்தை அது நிரப்பிக் கொண்டு இருப்பது விசித்திரமாக இருக்கிறது.
கூகுளின் தலைமை செயல் அதிகாரி, சுந்தர் பிச்சை இது குறித்து கூறுகையில், " கூகுளின் 25 சதவிகித மென்பொருள்கள் தற்போது AI மூலமாக தயாரிக்கப்படுகிறதாம் " அப்படி என்றால் அந்த 25 சதவிகித பணியை செய்து கொண்டு இருந்த பொறியாளர்களின் நிலை என்ன என்பது தான் இங்கு கேள்விக்குறி, சரி இப்போதைக்கு இது 25 சதவிகிதமாக இருக்கிறது, நாளை 50 சதவிகிதமாக உயர்ந்தால் என்ன ஆகும்?
பொதுவாக கூகுளில் தற்போது பணி புரிந்து வருபவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டான 2023 யை விட கிட்டதட்ட 2,500 பேர் கம்மி, அதாவது AI அவர்களை ரீப்ளைஸ் செய்து இருக்கிறது, ஒரு வேளை நாளை AI யின் பயன்பாடு கூகுளில் 50 சதவிகிதம் ஆனால் கிட்டதட்ட 80,000 ஊழியர்கள் பணி இழக்கும் அபாயம் இருப்பதாக மென்பொருள் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.