• India

Android 16 ரிலீஸ் தேதியை அறிவித்தது கூகுள்..!

Android 16 Release Update

By Ramesh

Published on:  2024-10-31 23:53:13  |    92

Android 16 Release Update - Android நிறுவனம் 2003 ஆம் ஆண்டு Android.Inc என்ற பெயரில் தோற்றுவிக்கப்பட்டது, முதலில் டிஜிட்டல் கேமராக்களுக்கு இயங்கு தளம் அமைக்கும் ஒரு நிறுவனமாக தான் Android செயல்பட்டு வந்தது, பின்னர் 2004 ஆம் ஆண்டு மொபைல்களுக்கு இயங்கு தளம் அமைக்கும் ஒரு நிறுவனமாக தங்களை விரிவு படுத்திக் கொண்டது, ஆண்ட்ராய்டின் அபரித வளர்ச்சியால் அப்போதைய ஜியாண்ட் கூகுளுக்கு சற்றே வயிறு பற்றி எரிந்து கொண்டு இருந்தது. 

சற்றே யோசித்த கூகுள் நிறுவனம், ஒரு 50 மில்லியன் டாலரை செலவு செய்து, Android யில் பணி புரியும் முக்கிய ஊழியர்கள் அனைவரையும் விலைக்கு வாங்கியது, இதனால் Android மொத்தமாக கூகுளின் வசம் பிடிபட்டது, தற்போது ஆண்ட்ராய்டு செல்போன்கள் மட்டும் அல்லாமல், டெலிவிஷன், கார்ஸ், வாட்சஸ் என பல எலக்ட்ரானிக் பொருள்களுக்கு இயங்கு தளம் தயாரித்து வெளியிட்டு வருகிறது.


சரி, ஆண்ட்ராய்டு 16 ரிலீஸ் எப்போது?

ஆண்ட்ராய்டு 15 இயங்கு தளம் அக்டோபர் 15 ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் வாடிக்கையாளர்களின் கவனம் தற்போது ஆண்ட்ராய்டு 16 பக்கம் திரும்பி இருக்கிறது, கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு 16 குறித்த தகவல்களை கொஞ்சம் கொஞ்சமாக கசிய விட்டு வருகிறது, அதாவது ஆண்ட்ராட்டு 16 இயங்கு தளத்தின் மேஜர் ரிலீஸ் 2025 யின் இரண்டாம் பாதியில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது,

அதே சமயத்தில் இயங்கு தளத்தின் இயக்கம் எல்லாம் ஆராய்ந்த பிறகு, அதில் இருக்கும் தவறுகள் எல்லாம் சரி செய்யப்பட்டு, ஒரு முழு நீள ஆண்ட்ராய்டு 16 இயங்கு தளம் 2025 யின் நான்காம் பாதியில் வெளியாகும் என தெரிகிறது, ஆண்ட்ராய்டு 16 இயங்குதளத்தின் முதல் பதிப்பு முதலாவதாக கூகுளின் அதிகாரப்பூர்வ படைப்பான கூகுள் பிக்ஸல்ஸ் மொபைலில் தான் வெளியாகுமாம்.