AI Cannot Be Controlled In Future - வரும் காலங்களில் மனிதர்களின் கண்டுபிடிப்பான AI, மனிதர்கள் கட்டுப்பாடே இல்லாமல் இயங்க வாய்ப்பு இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.
செயற்கை நுண்ணறிவு என்றதொரு விடயம் தற்போது உலகையே வியக்க வைத்துக் கொண்டு இருக்கிறது, ரொட்டி சுடுவதில் இருந்து ஒரு விமானத்தை இயக்கும் அளவிற்கு உலகில் செயற்கை நுண்ணறிவு ஒரு வித்தை காட்டிக் கொண்டு இருக்கிறது, எதிர் காலங்களில் யார் திறம்பட AI யை கையாள்கிறார்களோ அவர்களே வல்லரசு நாடாகவும் ஆக வாய்ப்புகள் இருக்கிறது.
ஆனால் இந்த AI யால் எந்த வித ஆபத்தும் இல்லையா என்றால் இருக்க தான் செய்கிறது, மனிதர்களுக்கு இருப்பது போல் உணர்வுகள் சொல்வதை புரிந்து கொள்ளும் தன்மை இதெல்லாம் இந்த AI களுக்கு இல்லை, நாம் என்ன Feed செய்கிறோமோ அதை நாம் தடுத்தாலும் கூட செய்து கொண்டே இருக்கும், உதாரணத்திற்கு கார்களில் AI வைத்து தானாகவே இயங்கும் வசதி இருக்கிறது.
தற்போது யாரேனு குறுக்கே பாய்கிறார்கள் என வைத்துக் கொள்வோம், மனிதரானால் அது ஒரு உயிர் என்ற உணர்வோடு எதையேனும் செய்ய துடிப்பான், ஆனால் AI என்னும் பட்சத்தில் ஒரு ஸ்பீடு பிரேக்கர் போல ஏற்றி சென்று கொண்டே இருக்க கூட வாய்ப்புகள் இருக்கிறது, பிரபல AI பாதுகாப்பு நிபுணர் ரோமன் யம்போலஸ்கி, AI குறித்து ஒரு அதிர்ச்சிகர தகவல்களை கூறி இருக்கிறார்.
ஒரு AI இணையத்துடன் கனெக்ட் செய்யப்பட்டு இருக்கும் போது, அது இணையத்தில் டேட்டாக்களை எல்லாம் எடுத்து தக்க வைத்துக் கொண்டு, உலகில் உள்ள அனைத்து சேவைகளை கட்டுக்குள் கொண்டு வர முயற்சிக்கலாம் என கூறி இருக்கிறார், அதாவது மனிதனை மிஞ்சிய சக்தியாக, மனிதனுக்குள் அடங்காத ஒரு சக்தியாக AI எதிர்காலக்த்தில் உருவெடுக்கலாம் என்பது அவரது கருத்து.