தனியார் விண்வெளி துறை வளர்ச்சிக்காக ஸ்டார்ட் அப்களுக்கு ரூ 1000 கோடி ஒதுக்கீடு!

Indian Government Alloted Rs 1000 Crore To Support Private Space Research Sectors - விண்வெளி துறை வளர்ச்சிக்காக இந்தியாவில் இருக்கும் தனியார் ஸ்டார்ட் அப்களுக்கு உதவும் வகையில் ரூ 1000 கோடி ஒன்றிய அரசு ஒதுக்கீடு செய்து இருக்கிறது.
Indian Government Alloted Rs 1000 Crore To Support Private Space Research Sectors

Indian Government Alloted Rs 1000 Crore To Support Private Space Research Sectors - உலகளாவிய விண்வெளித் துறை ஆராய்ச்சி வளர்ச்சியில் இந்தியா 6 ஆவது இடத்தை பெற்று இருக்கிறது, ஆனாலும் கூட அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளை ஒப்பிடும் போது இந்தியா இன்னுமே ஒரு கத்துக்குட்டியாக தான் இருக்கிறது, அமெரிக்காவில் ஏன் இவ்வளவு அபரித வளர்ச்சி என்று யோசித்திடும் போது அங்கு பல தனியார் ஸ்பேஸ் நிறுவனங்கள் நாசாவை விட பல்வேறு அட்வான்ஸ்டு ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

உதாரணத்திற்கு எலான் மஸ்க் அவர்களின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் பல்வேறு விண்வெளித் துறை ஆராய்ச்சிகளை வெற்றிகரமாக நிகழ்த்தி வருகிறது, உலகின் தலை சிறந்த நம்பர் 1 தனியார் விண்வெளித் துறை ஆராய்ச்சி நிறுவனமாகவும் ஸ்பேஸ் எக்ஸ் செயல்பட்டு வருகிறது, ஆனால் அந்த வகையில் இந்தியாவை எடுத்துக் கொண்டால் மற்ற நாடுகளை விட மிகக்குறைந்த அளவிலேயே தனியார் விண்வெளித்துறை ஆராய்ச்சி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.



ஆனால் அந்த நிறுவனங்களும் பெரிதாக எந்த ஆராய்ச்சியும் செய்யவில்லை, சிறிய ரக ஆராய்ச்சிகளை மட்டும் செய்து வருகின்றனர், காரணம் அவர்களால் ஸ்பேஸ் எக்ஸ் போல பெரிய முதலீடு போட்டு ஆராய்ச்சிகளை செய்ய இயலவில்லை, ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தாலும் கூட அவர்களிடம் அதற்கான முதலீடு என்பது இல்லை, இதனை கருத்தில் கொண்டு தான் ஒன்றிய அரசு தனியார் விண்வெளி துறைகளையும் வளர்க்க முடிவு செய்து இருக்கிறது.

அதாவது நாட்டில் சிறப்பாக செயல்படும் 40 தனியார் விண்வெளி துறைகளை தேர்ந்தெடுத்து அந்த நிறுவனங்களின் வளர்ச்சிக்காக ரூபாய் ஆயிரம் கோடி ஒதுக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது, ஒன்றிய அரசும் இதற்கு ஒப்புதல் அளித்து இருக்கிறதாம், இதன் மூலம் இந்திய விண்வெளித் துறையின் வளர்ச்சி ஆனது மேலும் வலுப்படும் என ஒன்றிய அரசு தகவல் விடுத்து இருக்கிறது.