13 நாட்களில்...கிட்டதட்ட 300 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

Bomb Threats: 13 Days, Over 300 Flights Affected - கடந்த பன்னிரெண்டு நாட்களில் மட்டும் 300 இந்திய விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு இருப்பதால் விமான சேவை இந்தியாவில் வெகுவாக பாதிக்கப்பட்டு இருக்கிறது.
Bomb Threats: 13 Days, Over 300 Flights Affected

Bomb Threats: 13 Days, Over 300 Flights Affected - கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 9 இண்டிகோ விமானங்கள், 8 விஸ்டாரா விமானங்கள், 8 ஸ்பைஸ் ஜெட் விமானங்கள் மற்றும் 9 ஏர் இந்தியா விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டு இருக்கிறது, கடந்த 12 நாட்களில் மட்டும் கிட்ட தட்ட 276 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு இருக்கிறது, எல்லா மிரட்டல்களும் X மற்றும் மெட்டா வலைதளங்களில் அக்கவுண்ட் வைத்து இருக்கும் மர்ம நபர்களால் விடுக்கப்பட்டு இருக்கிறது.

தொடர் மிரட்டல்களின் விளைவால் பெரும்பாலான விமானங்கள் தாமதமாக புறப்படுகிறது, பயணிகளும் பெரும் இடையூறுக்கு உள்ளாகின்றனர், பெரும்பாலான விமானங்கள் நாளுக்கு இரண்டு நடை அடிக்கிறது என்றால் தற்போது செக்கிங் உள்ளிட்ட தாமதங்களால் ஒரு நடை மட்டுமே அடிக்க முடிகிறது, ஒரு சில விமானங்கள் முன்னெச்சரிக்கை விளைவாக ரத்து கூட செய்யப்படுகின்றன.


இதனால் இந்திய விமான சேவை நிறுவனங்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டு இருக்கிறது, இந்த 13 நாளில் மட்டும் தேசம் முழுக்க இருக்கும் விமான சேவை நிறுவனங்களுக்கு கிட்ட தட்ட ஆயிரம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது, மிரட்டல்கள் பெரும்பாலும் புரளி என்றாலும் கூட விதிப்படி மிரட்டல் என்று ஒன்று வந்தாலே விமானத்தை முழுவதும் பரிசோப்பது அவசியம் ஆகிறது.

என்ன தான் அரசு மிரட்டல்காரர்களுக்கு எச்சரிக்கை கொடுத்தாலும், தொடர்ந்து மிரட்டல்கள் அதிகரித்த வண்ணம் தான் இருக்கிறது, ஒரு பக்கம் மிரட்டல் காரர்களின் தகவல்களை தர மறுக்கிறது எக்ஸ் நிறுவனம், இன்னொரு பக்கம் மெட்டா தகவல்களை சேகரிக்கவே பல நாட்கள் தாமதப்படுத்துகிறது, இந்த தாமதங்கள் மிரட்டல் விடுப்பவர்களுக்கு மெத்தனமாகி போகவே தொடர்ந்து மிரட்டல்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.