• India
```

ஸ்ரீதர் வேம்பு Zoho CEO பதவியில் இருந்து விலகல்...என்ன காரணம் தெரியுமா...?

Zoho CEO Resigns

By Ramesh

Published on:  2025-01-27 23:53:30  |    27

Sridhar Vembu Resigns - பிரபல Zoho நிறுவனத்தின் நிறுவனர் Zoho வின் CEO பதவியில் இருந்து விலகி இருக்கிறார் அது குறித்து இந்த தொகுப்பில் முழுமையாக பார்க்கலாம்.

Sridhar Vembu Resigns - Zoho என்பது ஆரம்ப காலக்கட்டத்தில், அதாவது அது துவங்கப்பட்ட காலத்தில் ஸ்ரீதர் வேம்புவிற்கு சம்பந்தமே இல்லாத ஒரு நிறுவனம் தான், ஸ்ரீதர் வேம்புவின் சகோதரர்கள் ஆன குமார் வேம்பு மற்றும் சேகர் வேம்பு இருவரும் டோனி தாமஸ் உடன் இணைந்து, 1996 ஆம் ஆண்டு அட்வென்ட்நெட் (AdventNet) என்ற பெயரில் ஒரு குட்டி நிறுவனமாக தான் இன்றைய Zoho வை ஆரம்பித்தனர்.

1997 ஆம் ஆண்டு லாஸ் வேகஸ்சில் நடைபெற்ற ஒரு வர்த்தக மாநாட்டில் ஸ்ரீதர் வேம்புவும், டோனி தாமஸ்சும் சந்திக்கும் நிலை ஏற்படுகிறது, அங்கு டோனி தாமஸ், 'சேல்ஸ் பிரிவிற்கு ஏதும் ஆள் இருந்தால் சொல்லுங்கள்' என்று ஸ்ரீதர் வேம்புவிடம் ஒரு கோரிக்கையாக கேட்டு இருக்கிறார், அதற்கு 'நானே எடுத்து செய்கிறேன்' என ஸ்ரீதர் வேம்பு சொன்ன பதில் தான் இன்று Zoho என்னும் சர்வதேச நிறுவனம் அமைய உந்துதலாக அமைந்தது.



Zoho ஸ்ரீதர் வேம்புவின் கைகளுக்கு வந்த பின் அவருடைய நிர்வாகம் Zoho வை அதிரடியான வளர்ச்சிக்கு அழைத்து சென்றது, ஆனால் தற்போது Zoho வின் CEO ஆக இருக்கும் ஸ்ரீதர் வேம்பு அப்பதவியில் இருந்து விலகுவதாகவும், மேலும் தான் கொண்ட அந்த பதவியை, Zoho வின் துணை நிறுவனர் ஆன சைலேஷ் ரெட்டியிடம் ஒப்படைப்பதாகவும் ஸ்ரீதர் வேம்பு அறிவித்து இருக்கிறார்.

ஏன் இந்த முடிவு என கேட்ட போது, உலகமே புது புது கண்டு பிடிப்புகளை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது, நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சி என்பது ஒரே இடத்தில் தேங்கி நின்றால் வந்து விடாது, நானும் என்னுடன் சிலரையும் சேர்த்து இனி கண்டு பிடிப்புகளுக்காக ஓட போகிறோம், இனி Zoho வில் என்னுடைய பதவி தலைமை விஞ்ஞானி என்ற பொறுப்பில் இருக்கும் என வேம்பு அறிவித்து இருக்கிறார்.

" முக்கியமாக செயற்கை நுண்ணறிவு பிரிவில், Zoho வின் தலைமை விஞ்ஞானி வேம்புவின் குழு முதற்கட்டமாக முழு மூச்சாய் இறங்க இருப்பதாக தகவல் "