• India
```

வாக்குவாதத்தில் ஈடுபட்ட டொனால்ட் ட்ரம்ப்...ஜெலன்ஸ்கி வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேற்றம்...என்ன நடந்தது...?

Trump Zelensky Clash In White House

By Ramesh

Published on:  2025-03-01 08:54:42  |    201

Conflicting Statements Between Trump and Zelensky - டொனால்ர் ட்ரம்ப் மற்றும் ஜெலன்ஸ்கி இடையே நடந்த வாக்குவாதத்தால் ஜெலன்ஸ்கி வெளியேற்றப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போர் நிகழ்ந்து கொண்டு இருக்கிறது, உக்ரைனுக்கு ஆதரவாக களம் இறங்க வேண்டிய ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் இந்த போரை கண்டும் காணாமல் விட்ட நிலையில், அமெரிக்கா மட்டும் உக்ரைனுக்கு பல்வேறு வகையில் ஆயுத உதவிகள் செய்து வந்தது.

சரி அமெரிக்கா இந்த விடயத்தில் தலையிட்டது ஏன் என்பது பலருக்கும் கேள்வியாக இருந்தது, அமெரிக்காவின் வல்லரசு என்ற அதிகாரத்தின் மூலம் நாட்டாமைதனத்தில் ஈடுபடுகிறதோ என்ற ஐயம் தான் முதலில் இருந்தது, ஆனால் அமெரிக்கா முழுக்க முழுக்க உக்ரைனின் கனிம வளத்தின் மீது கண் வைத்து இருந்து இருக்கிறது, என்பது இப்போது தான் புலப்படுகிறது.



அதிபர் ட்ரம்ப், உக்ரைன் கனிம வள ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டால் உக்ரைனுக்காக களத்தில் நின்று அமெரிக்கா போராட தயார் என சில நாட்களாகவே உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அழுத்தம் கொடுத்து வந்தார், முதலில் அது மக்களின் வளம் என ஒப்பந்தத்திற்கு மறுத்து வந்த ஜெலன்ஸ்கி ஒரு கட்டத்திற்கு பின் ஒப்பந்தத்திற்கு ஏற்றுக் கொண்டு கையெழுத்து இடுவதாக சொன்னதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ட்ரம்ப் - ஜெலன்ஸ்கி இடையிலான பேச்சு வார்த்தை நடைபெற்ற நிலையில், ஒரு கட்டத்தில் அது வாக்குவாதம் ஆகி ஜெலன்ஸ்கி வெளியேற்றப்பட்டதாக கூறப்படுகிறது, 'இதுவரை உக்ரைனுக்கு அளித்த ஆயுத செலவு மட்டுமே 300 பில்லியன் டாலர், நாங்கள் இல்லை என்றால் 5 நாட்கள் கூட போரில் தாக்கு பிடித்து இருக்க மாட்டீர்கள்' என ட்ரம்ப் வாக்குவாதத்தின் போது ஜெலன்ஸ்கியிடம் கூறியதாக கூறப்படுகிறது.