• India
```

இந்த பூமியில் மொத்தமாக...எவ்வளவு தங்கம் இருக்கிறது...என்பது குறித்து தெரியுமா...?

How Much Gold Is On Earth

By Ramesh

Published on:  2025-01-31 00:10:44  |    128

How Much Gold Is On Earth - எடுக்க எடுக்க வந்து கொண்டே இருக்கிறதே, இந்த பூமியில் அப்படி எவ்வளவு தான் தங்கம் இருக்கும் தெரிந்து கொள்ளலாம் வாங்க.

How Much Gold Is On Earth - தங்கம் இந்த உலகில் அதிகமாக பயன்படுத்தும் உலோகங்களுள் ஒன்றாக தங்கம் இருக்கிறது, ஆபரணங்களுக்காக மட்டும் என்று அல்லாமல், பல எலக்ட்ரானிக்ஸ் பொருள்களிலும் தங்கம் தவிர்க்க முடியாத உலோகமாக இருக்கிறது, இது போக ஒரு நாட்டின் மதிப்பை நிர்ணயிப்பதிலும் தங்கம் என்பது முக்கிய பங்கு வகிக்கிறது.

சரி ஒவ்வொருவரும் 30 பவுன், 40 பவுன், ஒரு கிலோ தங்கம் என வாங்கிக் கொண்டே செல்லும் போதும் கூட இந்த தங்கம் எப்படி தீர்ந்து போகாமல் இருக்கிறது என்பது குறித்த சந்தேகம் பொதுவாகவே இங்கு அனைவருக்கும் இருக்கும், இந்த தங்கம் என்பது இயற்கையாக கிடைக்கும் ஒரு மதிப்பு மிக்க பொருள், பொதுவாக சுரங்கம் அமைத்து தான் தங்கத்தை எடுப்பார்கள்.



உலகளாவிய அளவில் சீனாவில் தான் அதிக தங்க சுரங்கங்கள் இருப்பதாக ஒரு தகவல் இருக்கிறது, அதற்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியா, ரஷ்யா நாடுகளில் அதிக தங்க சுரங்கங்கள் இருக்கின்றன, அப்படி என்றால் இந்தியாவில் தங்க சுரங்கங்கள் இல்லையா என்றால் இருக்கிறது, இந்தியாவில் கிட்டத்தட்ட 550 தங்க சுரங்கங்கள் செயல்பாட்டில் இருக்கின்றன.

சரி இந்த பூமியில் உள்ள மொத்த தங்கத்தையும் எடுத்தால் எவ்வளவு இருக்கும் என்று உங்கள் மனதில் கேள்வி எழுந்தால் அதற்கும் பதில் இருக்கிறது, அதாவது இந்த பூமியில் இருக்கும் மொத்த தங்கத்தையும் எடுத்தால், இந்த பூமியை சுற்றி தங்கத்தால் ஒரு 1.5 அடிக்கு கவசம் அமைத்து விடலாமாம், அந்த அளவிற்கு இந்த பூமிக்குள் தங்கம் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.