Trump Warning To Indian Tax Tariffs - இந்தியாவில் அமெரிக்க பொருட்களுக்கு அதீத வரி விதிக்கப்பட்டால், அமெரிக்காவிலும் இந்திய பொருட்களுக்கு அதே வரி விதிக்கப்படும் என ட்ரம்ப் எச்சரித்து இருக்கிறார்.
இதனால் அமெரிக்காவில் வசிக்கும் இலட்சக்கணக்கான இந்தியர்கள் பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது, இது போக வரி விதிப்பிலும் கொஞ்சம் கறாராக இருக்கிறார், அமெரிக்காவில் செயல்படும் அமெரிக்க நிறுவனங்களுக்கு ஒரு வரி விதிப்பு, பிற நாட்டு ஒரு நிறுவனங்களுக்கு அதீத வரி விதிப்பு, அமெரிக்க தயாரிப்புகளுக்கு ஒரு வரி விதிப்பு, பிற நாட்டு தயாரிப்புகளுக்கு ஒரு வரி விதிப்பு.
இது மட்டும் அல்லாது எந்த எந்த நாடுகள் அமெரிக்க பொருள்களுக்கு அவர்களது நாடுகளில் அதீத வரி விதிக்கிறதோ, அந்தந்த நாட்டு பொருட்களுக்கு அமெரிக்காவிலும் அதே வரி விதிக்கப்படும் என ட்ரம்ப் எச்சரித்து இருக்கிறார், இந்த எச்சரிக்கை இந்தியாவிற்குமானது எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டு கூறி இருப்பதன் மூலம் ட்ரம்ப்பின் ஒரு சில நடவடிக்கைகள் இந்தியாவிற்கு எதிராக திரும்பி வருவதாக தகவல்.