• India
```

இனி BSNL தான்!! மிகவும் குறைவான கட்டணத்தில் செம்ம ரீசார்ஜ் பேக்..

BSNL Recharge Plan Validity

By Dhiviyaraj

Published on:  2025-01-21 15:53:59  |    111

பல வாடிக்கையாளர்கள் அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் (BSNL) பக்கம் மாறி வருகின்றனர்

தற்போது இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல், மற்றும் வோடபோன்-ஐடியா ஆகியவை தங்களின் ரீசார்ஜ் கட்டணங்களை தொடர்ந்து உயர்த்தி வருகின்றன. இதன் விளைவாக, பல வாடிக்கையாளர்கள் அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் (BSNL) பக்கம் மாறி வருகின்றனர்.

பிஎஸ்என்எல் இதுவரை 4G சேவையை முறையாக செயல்படுத்தவில்லை என்றாலும், அதன் குறைந்த கட்டண திட்டங்கள் மற்றும் சலுகைகள் காரணமாக வாடிக்கையாளர்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக, இணைய சேவைகள் மற்றும் டேட்டா திட்டங்கள் மிகக்குறைந்த விலைக்கு வழங்கப்படுவதால், பலர் பிஎஸ்என்எல் பக்கம் மாறும் நிலை உருவாகியுள்ளது.

தற்போது BSNL மிகவும் குறைவான கட்டண திட்டத்தை கொண்டுவந்துள்ளது. அதன்படி, ரூபாய் 108 க்கு ரீசார்ஜ் செய்தால் 28 நாட்கள் வேலிட்டி இருக்கும் மேலும், தின.மும் 1ஜிபி டேட்டா உங்களுக்கு கிடைக்கும். 500 SMS அனுப்பலாம். 1GB டேட்டா முடிந்த பிறகு  40 கேபிபிஎஸ் வேகத்தில் நீங்கள் இணையத்தை பயன்படுத்த முடியும் என்று  தெரிவித்து இருக்கிறது.