• India
```

Zepto இல் 665 மில்லியன் டொலர் முதலீடு..அமிதாப் பச்சனின் புதிய முயற்சி !

Amitabh Bachchan Stocks | Amitabh Bachchan News

Amitabh Bachchan Stocks -Swiggy இன் குறிப்பிடத்தக்க பங்குகளை பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் குடும்பம் வாங்கியுள்ளது.அமிதாப் பச்சன், சினிமா மட்டுமின்றி, ரியல் எஸ்டேட் மற்றும் பங்கு சந்தை முதலீடுகளில் ஆர்வம் மிக்கவராக இருக்கிறார்.

Swiggy இன் ஊழியர்கள் மற்றும் ஆரம்பக் கட்ட முதலீட்டாளர்களின் பங்குகளை அமிதாப் பச்சன் குடும்ப அலுவலகம் வாங்கியுள்ளது. நடிகர் அமிதாப் பச்சன், சினிமா தொழிலில் மட்டுமல்லாமல், ரியல் எஸ்டேட் மற்றும் பங்கு சந்தையில் முதலீடுகளை செய்துகொண்டு வருகிறார்.

மேலும்,இதன் மூலம் அதிக வருமானம் பெற்று வருகிறார்.இந்தியாவின் பல ஸ்டார்ட்அப் நிறுவனங்களில், குறிப்பாக டிஜிட்டல் டெக் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களில், அமிதாப் பச்சன் நீண்ட காலமாக முதலீடு செய்துள்ளார்.

சமீபத்தில், ஸ்விக்யின் பங்குகளை மோதிலால் ஒஸ்வால் நிதி சேவைகள் நிறுவனத்தின் தலைவர் ராம்தேவ் அகர்வால் வாங்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.அமிதாப் பச்சன், Zepto இன் 665 மில்லியன் டாலர் முதலீட்டு சுற்றில் பங்குகளை வாங்கியுள்ளார்.