World's Most Valuable Material - உலகிலேயே மிக காஸ்ட்லியான உலோகம் குறித்து இந்த தொகுப்பில் முழுமையாக பார்க்கலாம்.
பொதுவாக நமக்கு எல்லாம் விலை உயர்ந்த உலோகம் என்றால் தங்கம், வைரம், வைடூரியம், வெள்ளி, பிளாட்டினம் இதை தவிர நமக்கு விலையுயர்ந்த உலோகங்கள் எதுவும் நமக்கு தெரியாது, ஆனால் உலகிலேயே மிக மிக விலை உயர்ந்த உலோகம் ஒன்று இருக்கிறது, அதன் ஒரு கிராம் விலை மதிப்பு என்பது உலகின் பாதி பொருளாதாரத்தின் மதிப்பாக இருக்குமாம்.
சரி அப்படி என்ன உலோகம் என்றால், அந்த உலோகத்தின் பெயர் என்பது ஆண்டிமேட்டர் (Antimatter) எனப்படும் எதிர் பொருள் உலோகம், பொதுவாக இந்த ஆண்டிமேட்டர் என்பது ஒரு சாதாரண பொருள்களுக்கு எதிரான துகள் போன்றது, அதாவது, சாதாரண ஒரு பொருளில் உள்ள ஒவ்வொரு துகளுக்கும், சமமான எதிர் துகள் ஆண்டிமேட்டரில் இருக்கும்.
உதாரணமாக, எலக்ட்ரானுக்கு பாசிட்ரான் (positron) என்ற எதிர் துகள் இருக்கிறது அல்லவா அது போல தான், பொதுவாக இந்த ஆண்டிமேட்டரும் சாதாரண பொருளும் ஒன்றோடு ஒன்று மோதும்போது, அவை இரண்டும் அழிந்து மிகப்பெரும் ஆற்றலை வெளியிடும், இந்த ஆண்டிமேட்டரரின் சிறு துகள் கூட பெரும் ஆற்றல் மூலமாக செயல்படும்.
எதிர்காலத்தில் இந்த ஆண்டிமேட்டர் விண்வெளித்துறை, மருத்துவத்துறை, ஆற்றல் உற்பத்தி, பாதுகாப்பு துறைகள் என அனைத்து துறைகளிலும் மிகப்பெரிய ஆதிக்கம் செலுத்தும் என கூறப்படுகிறது, இந்த உலோகத்தின் பயன்பாடு இன்னும் செயலில் இல்லை, ஆனாலும் இந்த உலோகத்தின் ஒரு கிராம் மதிப்பு 62 ட்ரில்லியன் டாலர் என அறியப்படுகிறது.
" அதாவது தற்போதைய எலான் மஸ்க்கின் ஒட்டு மொத்த சொத்தை 62.8 மடங்குகளாக பெருக்கினால் தான் இந்த உலோகத்தை ஒரு கிராம் வாங்க முடியும் "