• India
```

70 கி.மீ சதுர அடியில்...துபாயில் உருவாகி வரும்...உலகின் மிகப்பெரிய விமான நிலையம்...!

Al Maktoum International Airport

By Ramesh

Published on:  2025-01-16 20:38:22  |    18

Al Maktoum International Airport - உலகளாவிய அளவில் மிகப்பெரிய விமான நிலையம் ஒன்று துபாயில் கட்டப்பட்டு வருகிறது, அதன் பரப்பளவு மட்டும் 70 கி.மீ சதுர அடி இருக்குமாம், Al Maktoum சர்வதேச விமான நிலையம் என பெயரிடப்பட்டு இருக்கும் இந்த விமான நிலையம், தற்போதைய துபாய் சர்வதேச விமான நிலையத்தை விட ஐந்து மடங்கு மிகப்பெரியது என கூறப்பட்டு வருகிறது,

கடந்த ஏப்ரல் 2024 முதல் இந்த விமான நிலையத்தின் கட்டுமானம் நடைபெற்று வருகிறது, தற்போதைக்கு இந்த விமான நிலையத்தின் 17% சதவிகித பணிகள் முடிவடைந்து இருப்பதாக தெரிகிறது, அனைத்து பணிகளும் முடிவடையும் பட்சத்தில் உலகின் மிகப்பெரிய சர்வதேச விமான நிலையமாக இந்த Al Maktoum சர்வதேச விமான நிலையம் உருவெடுக்கும் என கூறப்படுகிறது,



சரி அப்படி என்ன தான் இந்த விமான நிலையத்தில் வரவிருக்கிறது என்றால், இந்த ஏர்போர்ட்டில் 5 இணையான ஓடு பாதை வரவிருக்கிறதாம், 400 விமான வாயில்கள் வரவிருக்கிறதாம், வருடத்திற்கு 12 மில்லியன் சரக்குகளை இந்த விமான நிலையம் கையாள இருக்கிறதாம், வருடத்திற்கு 260 மில்லியன் பயணிகளை இந்த விமான நிலையம் கையாளும் என எதிர்பார்க்கப்படுகிறது,

35 பில்லியன் அமெரிக்க டாலர் அதாவது இந்திய மதிப்பில் 3 இலட்சம் கோடி ரூபாய் செலவில் தயாராகி வரும் இந்த விமான நிலையம், 2030 முதல் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது, நடைமுறைக்கும் வரும் பட்சத்தில் உலகளாவிய அளவில் மிகப்பெரிய விமான நிலையம் மற்றும் மிகப்பெரிய விமான தளவாடமாக இந்த Al Maktoum சர்வதேச விமான நிலையம் அமையும்.