States in India with the Longest Work Weeks - தேசத்தில் வாரத்திற்கு 70 மணி நேரம் வரை வேலை செய்யும் ஊழியர்கள் அதிகம் கொண்ட மாநிலம் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
பொதுவாக பிரபல நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் வார வேலை நேரம் குறித்து அவ்வப்போது கருத்து தெரிவிப்பதுண்டு, வாரத்திற்கு 90 மணி நேரம் வேலை செய்தால் என்ன, ஞாயிற்றுக் கிழமையும் வேலை செய்தால் என்ன, ஏன் வீட்டில் இருந்தே வேலை செய்கிறீர்கள் அலுவலகத்திற்கு வந்தால் என்ன பல கருத்துக்களை பொதுவெளியில் கூறி வருகின்றனர்.
ஆனால் ஊழியர்களுக்கோ இந்த வார வேலை நேரம் குறித்த கருத்துகளில் பெரிதாக வேறுபாடு உண்டு, இந்தியாவை விட ஊழியர்களுக்கு 2 மடங்கு சம்பளம் வழங்கும், பிரிட்டன், கனடா உள்ளிட்ட நாடுகள் எல்லாம் வார வேலை நாட்களை 4 நாட்களாக குறைத்து வரும் நிலையில், இந்திய நிர்வாகிகள் மட்டும் 70 மணி நேரம் வேலை பார்க்க சொல்வது எல்லாம் என்ன வித மனப்பாங்கு என கேள்வி எழுப்புகின்றனர்.
சரி அப்படி உண்மையில் வாரத்திற்கு 70 மணி நேரம் வேலை பார்க்கும் ஊழியர்கள் எல்லாம் இந்தியாவில் இருக்கின்றனரா என்றால் ஆம் இருக்கிறார்கள், குஜராத் மாநிலத்தில் மட்டும் அந்த மாநிலத்தின் 7.21% ஊழியர்கள் வாரத்திற்கு 70 மணி நேரம் உழைக்கிறார்களாம், அதற்கு அடுத்தபடியாக பஞ்சாப் மாநிலத்தில் 7.09% ஊழியர்கள் வாரத்திற்கு 70 மணி நேரம் உழைக்கிறார்களாம்.
அதற்கு அடுத்தபடியாக மஹாராஸ்டிரா மாநிலத்தில் 6.69% ஊழியர்களும், மேற்கு வங்கத்தில் 6.19% ஊழியர்களும், கேரள மாநிலத்தில் 6.16% ஊழியர்களும் வாரத்திற்கு 70 மணி நேரம் உழைக்கிறார்களாம், தமிழகத்திற்கு இப்பட்டியலில் 8 ஆவது இடம் கிடைத்து இருக்கிறது, தமிழகத்தில் மொத்த ஊழியர்களுள் 4.74% ஊழியர்கள் வாரத்திற்கு 70 மணி நேரம் உழைப்பதாக தகவல்.