• India
```

Budget 2025 | பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் என்ன...ஏழை மக்களுக்கும் நடுத்தர மக்களுக்கும்...இந்த பட்ஜெட்டில் என்ன இருக்கிறது...?

Union Budget 2025

By Ramesh

Published on:  2025-02-01 14:54:38  |    44

Budget Highlights 2025 - பட்ஜெட் 2025 யின் முக்கிய அம்சங்கள் குறித்து முழுமையாக இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இந்திய பட்ஜெட் 2025 ஆனது மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அமர்வுகளால், இன்று, அதாவது பிப்ரவரி 1 அன்று அவையில் சமர்ப்பிக்கப்பட்டு இருக்கிறது, அந்த பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் என்ன, முக்கிய கூறுகள் என்ன, இந்த பட்ஜெட்டால் யாருக்கு சாதகம், யாருக்கு பாதகம் என்பது குறித்து இந்த தொகுப்பில் முழுமையாக பார்க்கலாம்.

முதலில் இந்த பட்ஜெட்டின் சாராம்சமாக, வருட வருமானம் 12 இலட்சம் வரை இருக்கும் தனிநபருக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது, இதற்கு முன்பு ஆண்டு வருமானம் 7 இலட்சம் வரையில் மட்டுமே வரிவிலக்கு இருந்த நிலையில் தற்போது 12 இலட்சம் வரை வருமான விலக்கு அறிவிக்கப்பட்டு இருக்கிறது, இனி மாதம் ஒரு இலட்சம் சம்பளம் வாங்கினாலும் வரி கட்ட தேவையில்லை,



நிதிபற்றாக்குறை இலக்கு என்பது இந்த நிதி ஆண்டு 2025 க்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.8% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது, நிதி ஆண்டி 2026 க்கு நிதிபற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.4% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது, அடுத்த ஆண்டு அல்லது வரும் ஆண்டிற்கான சந்தைக்கடன் மதிப்பு 11.54 இலட்சம் கோடி வரை இருக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ளது,

மாநிலங்களின் உள்கட்டமைப்பிற்கு 50 ஆண்டுகள் வரை வட்டியில்லா கடன் வழங்க 1.5 இலட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, காப்பீட்டு துறையில் அந்நிய நேரடி முதலீடு என்பது 74 சதவிகிதம் ஆக இருந்த நிலையில் தற்போது 100 சதவிகிதம் ஆக உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது, இது போக புதுப்பிக்கப்பட்ட KYC பதிவு முறை 2025 யில் வெளியிடப்படுமாம்,


கல்வியில் செயற்கை நுண்ணறிவு நுட்பத்தை புகுத்திட 500 கோடி தனியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, நிதி அல்லாத துறைகளை கண்காணிக்க உயர்மட்டக்குழு, 36 உயிர் காக்கும் மருந்துகள் மற்றும் மாத்திரைகளுக்கு சுங்கரி வரி முழுமையாக விலக்கு போன்றவை முக்கிய அம்சங்களாக பார்க்கப்படுகின்றன, பட்ஜெட்டில் ஒரு சில நன்மைகள் இருந்தாலும் விவாத பொருள்களாகவும் ஒரு சில கூறுகள் இருக்கின்றன.

" முக்கியமாக காப்பீட்டு துறையில் 100% அந்நிய நேரடி முதலீடு, ஆளும் கட்சிக்கு சாதகமான மாநிலங்களுக்கு மட்டும் அதிகமான நிதி ஒதுக்கீடு போன்றவை எதிர்கட்சிகளிடையே விவாத பொருள்களாக மாறி இருக்கிறது "