India's First 3D-Printed Villa - சென்னையை மையமாக கொண்டு இயங்கி வரும் திவஸ்தா என்ற நிறுவனம் ஒரு செங்கல் கூட இல்லாமல் 2200 சதுர அடியில் ஒரு வில்லாவையே கட்டி அசத்தி இருக்கிறது.
ஒரு காலக்கட்டத்தில் பாறைகளும் குகைகளும் தான் வீடு, பின்னர் மனிதன் குடிசை கட்டி வாழத் துவங்கினான், பின்னர் அந்த குடிசை மண் வீடாக மாறியது, மண் வீடு கல் வீடாக மாறியது, தற்போது கான்க்ரீட் வீடாக மாறி இருக்கிறது, சரி இந்த கான்க்ரீட் வீடுகளில் என்ன புதுமை செய்ய முடியும் என யோசித்தால் வீடுகளை முன்னதாகவே கட்டி அதை நிலத்தில் அப்படியே செட்டப் செய்கின்றனர்.
வீடை பெயர்த்து எடுத்து இன்னொரு இடத்தில் வைக்கின்றனர், அந்த வகையில் கட்டிட கலை என்பதும் டெக்னாலஜிகளின் பிறப்பிடமாக மாறி வருகிறது, தற்போது சென்னையை மையமாக கொண்டு இயங்கி வரும் திவஸ்தா என்ற ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்று கோத்ரேஜ் ஈடன் எஸ்டேட் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவின் முதல் 3D வில்லா ஒன்றை உருவாக்கி இருக்கிறது.
2200 சதுர அடியில் உருவாக்கப்பட்டு இருக்கும் இந்த 3D வில்லா, ஒரு செங்கல் கூட இல்லாமல் கட்டப்பட்டு இருப்பது கூடுதல் சிறப்பு, இது முழுக்க முழுக்க கான்க்ரீட் 3D பிரிண்டரால் உருவாக்கப்பட்ட வில்லாவாம், பொதுவாக முதலில் வீடு அல்லது வில்லாவுக்கான டிசைன் வடிவமைக்கப்பட்டு அது கான்க்ரீட் 3D பிரிண்டருடன் இணைக்கப்பட்டு விடுமாம்.
அந்த இயந்திர ப்ரிண்டர் கான்க்ரீட் கலவையுடன், இயந்திரத்திற்குள் Feed செய்யப்பட்ட வடிவமைப்பை கட்டி முடிக்கும், இது தான் அந்த 3D பிரிண்டரின் வேலை, இப்படித்தான் இந்தியாவின் முதல் 3D வில்லாவை 4 மாதத்தில் உருவாக்கி சாதனை படைத்து இருக்கின்றனர் சென்னை திவஸ்தா நிறுவனம், இது இந்திய கட்டிடக்கலையில் ஒரு புதிய பரிணாமம் ஆக பார்க்கப்படுகிறது.