Trump's Disgraceful Treatment of Zelensky - வெள்ளை மாளிகையில் வைத்து அவமதிப்பிற்கு உள்ளாக்கப்பட்ட உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சோகத்தோடு வெளியேறிய காட்சிகள் உலக நாடுகளின் நெஞ்சை உருக்குவதாக அமைந்து இருக்கிறது.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் ஜெலன்ஸ்கி இடையிலான கனிமவள ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைக்காக ஜெலன்ஸ்கி அமெரிக்காவிற்கு சென்று இருந்தார், அதாவது உக்ரைனில் அமெரிக்கா கனிமவளம் எடுத்துக் கொள்ள உக்ரைன் அனுமதிக்க வேண்டும், அதற்கு பதிலாக உக்ரைனுக்கு தொடர்ந்து போரில் அமெரிக்கா உதவி செய்யும் என்பது தான் அந்த ஒப்பந்தம்.
இந்த ஒப்பந்தத்திற்கு முதலில் மறுத்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பின்னர் நாட்டின் சூழலை புரிந்து கொண்டு ட்ரம்பின் ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைக்கு செவி மடுத்தார், ஆனால் ஜெலன்ஸ்கி அமெரிக்காவில் இறங்கியது முதலே அமெரிக்காவின் பத்திரிக்கையாளர்கள் முதல் அதிபர் ட்ரம்ப் வரை சின்ன சின்ன விடயங்களில் அவரை அவமதித்துக் கொண்டே இருந்ததாக தெரிகிறது.
ஒரு கட்டத்திற்கு பின்னர் பொறுக்க முடியாமல் தனக்கு பேச வேண்டும் என தோன்றிய வார்த்தைகளை எல்லாம் ஜெலன்ஸ்கி கொட்டி தீர்க்கவே, ட்ரம்ப் இதனால் கோபமுற்றார், 'நீங்கள் இன்றளவும் போரை தாங்கி கொண்டு இருக்கிறீர்கள் என்றால் அதற்கு அமெரிக்கா செய்யும் உதவிகளே காரணம், இல்லையேல் ஐந்து நாட்களுக்குள் உக்ரைன் மொத்தமாக தகர்க்கப்பட்டு இருக்கும்,
இதுவரை ஆயுதங்களுக்காக மட்டும் 350 பில்லியன் டாலர் மதிப்பில் உக்ரைனுக்காக செலவளித்து இருக்கிறோம், நீங்கள் எப்படியும் இங்கு வந்து தான் ஆக வேண்டும், உக்ரைனுக்கு அமைதி வேண்டும் என நினைத்தால் நீங்கள் எப்படியும் இங்கு வந்து தான் ஆக வேண்டும்' என ட்ரம்ப் காட்டமாக கூறி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை வெள்ளை மாளிகை விட்டு வெளியேற்றி இருக்கிறார்.
" உக்ரைன் அதிபர் அவமதிக்கப்பட சம்பவம் உலக மீடியாக்களில் வேகமாக பரவவே, இதுவரை அமைதியாக இருந்த அண்டை நாடுகள் அனைத்தும் அமெரிக்காவின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து, உக்ரைனுக்கு ஆதரவாக கரம் நீட்டி இருக்கின்றன "