Trump Warning To Indian Tax Tariffs - அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் மற்றும் ட்ரம்ப் இடையிலான போட்டியில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி வாகை சூடி அடுத்த மாதம் அமெரிக்க அதிபராக பதவி ஏற்கவும் இருக்கிறார், இந்த நிலையில் அமெரிக்கா மட்டும் அல்லாது உலகளாவிய பல பிரச்சினைகள் குறித்து ட்ரம்ப் பொது வெளியில் கருத்து தெரிவித்து வருகிறார், பதவி ஏற்றதும் பல அதிரடி நடவடிக்கைகள் குறித்தும் பேசி வருகிறார்.
ரஷ்யா உக்ரைன் போர், குடியுரிமை சட்டம், வரி விதிப்பு உள்ளிட்டவைகள் குறித்து தொடர்ந்து பேசி வரும் ட்ரம்ப்பின் ஒரு சில நடவடிக்கைகள் இந்தியாவிற்கு எதிராக இருக்க வாய்ப்பு இருப்பதாக கூறி வருகின்றனர், உதாரணத்திற்கு இனி அமெரிக்காவில் பிற வெளிநாட்டவர்கள் குழந்தை பெறும் போது அந்த குழந்தைக்கு குடியுரிமை வழங்கப்பட மாட்டாது என ட்ரம்ப் அறிவித்து இருக்கிறார்.
இதனால் அமெரிக்காவில் வசிக்கும் இலட்சக்கணக்கான இந்தியர்கள் பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது, இது போக வரி விதிப்பிலும் கொஞ்சம் கறாராக இருக்கிறார், அமெரிக்காவில் செயல்படும் அமெரிக்க நிறுவனங்களுக்கு ஒரு வரி விதிப்பு, பிற நாட்டு ஒரு நிறுவனங்களுக்கு அதீத வரி விதிப்பு, அமெரிக்க தயாரிப்புகளுக்கு ஒரு வரி விதிப்பு, பிற நாட்டு தயாரிப்புகளுக்கு ஒரு வரி விதிப்பு.
இது மட்டும் அல்லாது எந்த எந்த நாடுகள் அமெரிக்க பொருள்களுக்கு அவர்களது நாடுகளில் அதீத வரி விதிக்கிறதோ, அந்தந்த நாட்டு பொருட்களுக்கு அமெரிக்காவிலும் அதே வரி விதிக்கப்படும் என ட்ரம்ப் எச்சரித்து இருக்கிறார், இந்த எச்சரிக்கை இந்தியாவிற்குமானது எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டு கூறி இருப்பதன் மூலம் ட்ரம்ப்பின் ஒரு சில நடவடிக்கைகள் இந்தியாவிற்கு எதிராக திரும்பி வருவதாக தகவல்.