Trump Warns BRICS - அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பிரிக்ஸ் நாடுகளை தொடர்ந்து எச்சரித்து வருகிறார் அது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா, எகிப்து, எத்தியோபியா, இந்தோனேசியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம் என பல நாடுகள் ஒன்றிணைந்தது தான் இந்த பிரிக்ஸ் அமைப்பு, இந்த அமைப்பின் நோக்கம் என்பது நாடுகளிடையேயான ஒருங்கிணைப்பு, அமைதியை நிலை நாட்டல், பாதுகாப்பு, வளர்ச்சி ஆகியவற்றில் இணைந்து செயல்படுதல் என்பதாகும்.
சரி இந்த அமைப்பிற்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கும் அப்படி என்ன தான் பிரச்சினை என்றால், கடந்த ஆண்டு ரஷ்யாவில் பிரிக்ஸ் நாட்டு அமைப்புகளின் மாநாடு நடைபெற்றது, அப்போது பிரிக்ஸ் நாடுகள் தங்களது வர்த்தகத்திற்காக புதிய கரன்சியை உருவாக்குவதில் ஆர்வம் காட்டினர், தற்போது வரை அமெரிக்க டாலர்களின் மூலம் தான் பிரிக்ஸ் நாடுகள் வர்த்தகத்தில் ஈடுபடுகின்றனர்.
பிரிக்ஸ் நாடுகளின் இந்த புதிய கரன்சிக்கான ஆர்வம் தான் அமெரிக்க அதிபரை கோபம் அடைய செய்து இருக்கிறது, உலகில் பெரும்பாலான நாடுகள் அமெரிக்க டாலரை மையமாக வைத்து தான் வர்த்தகம் செய்து வருகின்றன, இந்த பிரிக்ஸ் கூட்டமைப்பு புதிய கரன்சியை உருவாக்கினால் அது அமெரிக்க டாலருக்கு சர்வதேச ரீதியிலான மதிப்பை குறைத்து விடும்.
இந்த பயத்தில் தான் ட்ரம்ப் தனது ஆதங்கமான வார்த்தைகளை பிரிக்ஸ் நாடுகளின் மீது வெளிப்படுத்தி இருக்கிறார், அதாவது பிரிக்ஸ் நாடுகள் புதிய கரன்சியை உருவாக்கினால், அந்த குழுவில் இருக்கும் அனைத்து நாடுகளின் மீதும் இறக்குமதி வரி 100% விதிக்கப்படும் எனவும், அப்படியும் ஒத்துழைக்காவிட்டால் அந்த நாடுகளின் தயாரிப்புகள் நாட்டை விட்டு வெளியேறும் எனவும் எச்சரித்து இருக்கிறார்.