• India
```

உலக நாடுகளுக்கு நிதியுதவியை நிறுத்தும் ட்ரம்ப்.. அதிரடி முடிவு!!

Trump Suspends All Foreign Aid

By Dhiviyaraj

Published on:  2025-01-27 22:01:43  |    103

அமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள டொனால்டு ட்ரம்ப், தனது ஆட்சியை தொடங்கி உடனடியாக அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

அமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள டொனால்டு ட்ரம்ப், தனது ஆட்சியை தொடங்கி உடனடியாக அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வரிசையில், உலகின் பல்வேறு நாடுகளுக்கு வழங்கப்படும் அமெரிக்க நிதியுதவியை நிறுத்த அவர் உத்தரவிட்டுள்ளார்.

உலகின் மிகப்பெரிய நன்கொடையாளர்களில் ஒன்றாக இருக்கும் அமெரிக்கா, ஆண்டுதோறும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய நாடுகளுக்கு நிதி உதவி வழங்கி வருகிறது. கடந்த 2023-ஆம் ஆண்டில், அமெரிக்கா 64 பில்லியன் டாலர் நிதியை உலகளாவிய உதவித் திட்டங்களுக்கு ஒதுக்கியது, இது அந்த நாட்டின் நிதிநிலை அறிக்கையில் 1% ஆகும்.

அதன்படி, சுகாதாரம், கல்வி, மேம்பாடு, வேலைவாய்ப்பு பயிற்சி, ஊழல் தடுப்பு, பாதுகாப்பு உதவி போன்ற திட்டங்களுக்காக வழங்கப்பட்ட கோடிக்கணக்கான நிதியை உடனடியாக நிறுத்துமாறு ட்ரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதை செயல்படுத்தும் பொருட்டு, அந்தந்த நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ அறிவித்துள்ளார்.