• India

கால் மட்டும் பேசும் வாடிக்கையாளர்களுக்கு எதற்கு டேட்டாவோடு பிளான்...டெலிகாம் நிறுவனங்களிடம் TRAI கேள்வி...?

TRAI Mandate Specific Call And SMS Plans

By Ramesh

Published on:  2024-12-25 03:19:38  |    73

TRAI Mandate Specific Call And SMS Vouchers - இந்தியாவில் இன்னமும் பேசிக் மொபைல்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் கிட்டத்தட்ட 150 மில்லியன்களுக்கும் மேல் இருக்கிறார்கள், அவர்கள் அந்த மொபைலில் கால், எஸ் எம் எஸ் தவிர வேறு எதையும் பயன்படுத்துவதில்லை. அந்த வகையில் அவர்களுக்கு எதற்கு டேட்டாவோடு பிளான்கள் என TRAI நிறுவனம், டெலிகாம் நிறுவனங்களிடம் கேள்வி எழுப்பி இருக்கிறது.

பேசிக் மொபைல் பயனாளர்கள், இன்னமும் 2ஜி சேவையை தான் பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்கள் அவர்களுக்கெல்லாம் பெரும்பாலும் கால் பேசுவது என்பது மட்டுமே போதுமானதாக இருக்கிறது, ஆனால் டெலிகாம் நிறுவனங்கள், கால் மட்டும் பேசுவதற்கென்று, எஸ் எம் எஸ் மட்டும் அனுப்புவதற்கு என்று தனியாக எந்த ஒரு பிளான்களையும் வடிவமைக்கவில்லை.



இந்த தனி பிளான்கள் என்பவை இந்தியாவில் செயல்படும் ஏர்டெல், ஜியோ, வோடபோன் போன்ற முக்கிய நிறுவனங்களுக்கு தோன்றாமல் இருந்து இருக்காது, ஆனாலும் கால் மட்டும் பேசும் வகையில் பிளான்கள் என்றால் கட்டணத்தை குறைக்க வேண்டி இருக்கும், இதனால் டேட்டா என்று வெறுமனையாக Add செய்து இலாப நோக்கங்களுக்காக அதிக கட்டணம் கொண்ட பிளான்களை டெலிகாம் நிறுவனங்கள் வடிவமைத்து இருக்கின்றன.

இதனால் பல்வேறு வாடிக்கையாளர்களும் இது குறித்து சமூக வலைதளங்களில் சில மாதங்களாக கோரிக்கை விடுத்து வந்தனர், ஒரு வழியாக TRAI யிடம் இந்த தகவல் சேரவே, தற்போது TRAI டெலிகாம் நிறுவனங்களிடம் பேசிக் மொபைல் பயனர்களுக்கு, கால் மட்டும் பேசும் வகையில் தனியாக பிளான்களை அறிமுகப்படுத்த வேண்டும் என திட்டவட்டமாக கூறி இருக்கிறது.

" டெலிகாம் நிறுவனங்களும் இதற்கு இசைவு கொடுக்கும் பட்சத்தில் வருகின்ற 2025 யில் பேசிக் மொபைல் பயனர்களுக்கு இது ஒரு குட் நியூஸ் ஆக அமையும் "