Top 5 Highest Paid Indian Cricketer In IPL 2025 - ஐபிஎல் ஏலம் எல்லாம் முடிந்து விட்ட நிலையில் எந்த இந்திய வீரர், பிசிசிஐ யின் கான்டிராக்ட் சேர்த்து இந்த ஐபிஎல் லில் அதிக சம்பளம் யார் வாங்க இருக்கிறார் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Top 5 Highest Paid Indian Cricketer In IPL 2025 - பொதுவாக வருடத்திற்கு ஒரு முறை ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா நடைபெறுவது வழக்கம், 2025 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் என்பது 14 மார்ச் 2025 யில் துவங்கி 25 மே 2025 வரை நடைபெறுகிறது, ஒட்டு மொத்தமாக 74 போட்டிகள் நடைபெற இருக்கின்றன, மெகா ஆக்சனும் முடிவடைந்து இருக்கிறது, கடந்த வருடம் கொல்கத்தா அணி கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.
இந்த வருடம் சென்னை, கொல்கத்தா, குஜராத், மும்பை, பெங்களுரு, டெல்லி, பஞ்சாப், ஹைதராபாத், லக்னோ, ராஜஸ்தான் உள்ளிட்ட 10 அணிகள் இந்த ஐபிஎல் திருவிழாவில் கலந்து கொள்ள இருக்கின்றன, சென்னை அணியை பொறுத்தவரை ருதுராஜ் தலைமையில் இந்த வருடமும் கலந்து கொள்ள இருக்கிறது, ஒரு சில சமநிலையான வீரர்களை ஏலத்தில் எடுத்து சற்றே கொஞ்சம் பலத்தை சேர்த்து இருக்கிறது சென்னை.
ஏலத்தை பொறுத்தமட்டில் ரிஷப் பண்ட் அதிகபட்சமாக லக்னோ அணியால் 27 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார், இதற்கு முன்னர் அவர் டெல்லிக்கு ஆடியது குறிப்பிடத்தக்கது, அதற்கு அடுத்தபடியாக ஸ்ரேயஸ் ஐயர் 26.75 கோடிக்கு பஞ்சாப் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார், அதற்கு அடுத்தபடியாக வெங்கடேஷ் ஐயர் 23.75 கோடிக்கு கொல்கத்தா அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார்.
தற்போது பிசிசிஐ கான்ட்ராக்டையும் சேர்த்து ஐபிஎல் லில் அதிக சம்பளம் வாங்கும் வீரர்கள் வரிசையில் ரிஷப் பண்ட் முன்னிலை வகிக்கிறார், ஐபிஎல் சம்பளம் 27 கோடி + பிசிசிஐ கான்ட்ராக்ட் 3 கோடி சேர்த்து மொத்தம் 30 கோடி ரிஷப் பண்ட் இந்த ஐபிஎல்லில் வாங்க இருக்கிறார், அதற்கு அடுத்து விராட் கோஹ்லி 21+7= 28 கோடி, ஸ்ரேயஸ் 26.75 கோடி, பும்ரா 18+7=25 கோடி, ஜடேஜா 18+7 = 25 கோடி, ரோஹிட் 16.30+7=23.30 கோடி வாங்குவதாக தகவல்.