ஒரு காலகட்டத்தில் சினிமாவில் ஆண்களின் ஆதிக்கம் அதிகம் இருந்த நிலையில், தற்போதைய காலகட்டத்தில் அதெல்லாம் மாறிவிட்டது என்று சொல்லலாம். ஹீரோக்களை மையப்படுத்தி கதைகள் வந்தது போல இப்போது பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகள் வந்துகொண்டு இருக்கிறது.
மேலும் சில நடிகைகள் முன்னணி ஹீரோக்களுக்கு நிகராக சம்பளம் வாங்க தொடங்கிவிட்டனர். பலரும் சினிமாவில் சம்பாரிக்கும் பணத்தை பிற தொழில்களில் முதலீடு செய்து வருவதை நாம் பார்த்து இருப்போம்.
இந்நிலையில் தென்னிந்திய அளவில் அதிக சொத்து மதிப்பு இருக்கும் நடிகைகள் குறித்து பார்க்கலாம் வாங்க..
அனுஷ்கா ஷெட்டி:
இந்த லிஸ்டில் நடிகை அனுஷ்கா ஷெட்டி மூன்றாவது இடத்தில் இருக்கிறார். தற்போது சினிமாவில் இவருக்கு சரியான மார்க்கெட் இல்லை என்றாலும், அவரின் தற்போதைய சொத்து மதிப்பு ரூ.100 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது. இவர் ஒரு படத்திற்கு ரூபாய் 5 கோடி சம்பளம் வாங்குகிறாராம். மேலும் விளம்பரங்களில் நடிக்க அவருக்கு ரூ.1 கோடி சம்பளமாக பெறுவதாக கூறப்படுகிறது. சினிமாவை தாண்டி ரியல் எஸ்டேட்டிலும் பல கோடிகளை முதலீடு செய்து அதன்மூலம் கோடிக்கணக்கில் சம்பாதித்தும் வருகிறாராம் அனுஷ்கா ஷெட்டி. இவருடைய மொத்த சொத்து மதிப்பு ரூபாய் 100 கோடி இருக்கும் என்று இணையத்தில் சொல்லப்படுகிறது.
தமன்னா:
இரண்டாவது இடத்தை நடிகை தமன்னா பிடித்து இருக்கிறார். தமிழில் நடிக்கும்போது கொஞ்ச சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த தமன்னா ஹிந்திக்கு சென்று ஃபேமஸ் ஆன பிறகு தனது சம்பளத்தை கோடி ரூபாயில் வாங்க தொடங்கிவிட்டார். இவருக்கு சொத்து மதிப்பு ரூபாய் 110 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.
நயன்தாரா:
இந்த லிஸ்டில் முதலில் இருப்பவர் தமிழ் சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டாராக இருக்கும் நயன்தாரா தான். இவர் சினிமா மட்டுமின்றி பிசினஸிலும் கொடிகட்டிப் பறக்கிறார். ரெளடி பிக்சர்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை வைத்து இருக்கிறார் நயன்தாரா. மேலும் 9ஸ்கின் என்கிற அழகுசாதன பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்தையும் நிர்வகித்து வருகிறார். அதன்படி நயன்தாராவின் சொத்து மதிப்பு 200 கோடி வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.