• India
```

BBC யின்...உலகின் சக்தி மிகுந்த நூறு பெண்கள் பட்டியலில்...மூன்று இந்திய பெண்கள்...!

BBC Reveals 100 Women 2024

By Ramesh

Published on:  2024-12-06 03:01:30  |    124

Three Indian Women In BBC 100 Women 2024 - BBC வெளியிட்டு இருக்கும் உலகின் சக்தி மிகுந்த 100 பெண்கள் பட்டியலில் மூன்று இந்திய பெண்கள் இடம்பிடித்து இருக்கின்றனர்.

Three Indian Women In BBC 100 Women 2024 - BBC என்பது பொது நிதியில் இயங்கும் ஒரு பிரித்தானிய ஒலிபரப்பு கூட்டு ஸ்தாபனம் ஆகும், இலண்டனை மையமாக கொண்டு உலகளாவிய அளவில் செயல்பட்டு வரும் BBC நிறுவனம், சர்வதேச அளவில் சிறந்த செய்தி தொடர்பு நிறுவனமாக செயல்பட்டு வருகிறது, இந்த BBC ஒவ்வொரு வருடமும் உலகின் 100 சக்தி மிகுந்த பெண்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது.

இந்த வருடமும் அது போல 2024 யின் 100 சக்தி மிகுந்த பெண்கள் பட்டியலை BBC வெளியிட்டு இருக்கிறது, பல்வேறு துறைகளில் இருந்து பல்வேறு சாதனைகள் புரிந்து இருக்கும், பல நாடுகளின் பெண்கள் இதில் இடம் பிடித்து இருக்கின்றனர், இந்தியாவின் மூன்று சக்தி மிகுந்த பெண்களும் இந்த பட்டியலில் இடம் பிடித்து இருக்கின்றனர், அவர்கள் யார் யார் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

1. வினேஷ் போகத்



ஹரியானாவைச் சேர்ந்த மற்போர் வீரர் ஆக அறியப்படும் வினேஷ் போகத், இது வரை இந்தியா சார்பில் 3 முறை ஒலிம்பிக்கில் கலந்து கொண்டு இருக்கிறார், சமீபத்தில் நடந்து முடிந்த பாரிஸ் ஒலிம்பிக்கில் 100 கிராமில் தங்கத்தை தவற விட்ட வினேஷ் போகத்தை தங்கம் வென்றது போல கொண்டாடி தீர்த்தது இந்தியா, அவரது அசாத்திய வலிமை அனைவரும் அறிந்ததாக இருக்கும் நிலையில், தற்போது BBC யின் 100 சக்தி மிகுந்த பெண்களின் பட்டியலிலும் அவர் இடம் பிடித்து இருக்கிறார்.

2. பூஜா ஷர்மா



டெல்லியை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் பூஜா ஷர்மா, தனது சகோதரனின் இழப்பின் போது தனியாக அவருக்கு அனைத்து காரியங்களும் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது, அது அவரை மிகவும் பாதித்த நிலையில் அநாதையாக இறக்கும் அனைவருக்கும் களத்தில் இறங்கி தானே அவர்களுக்கு கடைசி காரியங்களையும், சம்பிரதாயங்களையும் செய்து கொண்டு இருக்கிறார், இதுவரை 4000 க்கும் மேற்பட்ட அநாதையான இறப்புகளுக்கு ஒளியூட்டி இருக்கிறார், இவரையும் BBC தனது Women 100 யில் சேர்த்து பெருமைப்படுத்தி இருக்கிறது.

3. அருணா ராய்



சென்னையை சேர்ந்த அருணா ராய், ஒரு சமூக செயற்பாட்டாளராக அறியப்படுகிறார், கிராமப்புற பெண்களின் வாழ்க்கை தர உயர்வுக்காக பல வித சமூக போராட்டங்களில் ஈடுபட்டு இருக்கிறார்,  சிறந்த சமூகத் தலைமைத் திறனுக்காக ரமன் மக்சேசே விருதை பெற்று இருக்கிறார், தகவல் அறியும் உரிமைச் சட்டம் இயற்றப்பட்டத்தில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறார், அந்த வகையில் இவரையும் BBC தனது Women 100 யில் சேர்த்து பெருமைப்படுத்தி இருக்கிறது.

" உலகளாவிய அளவில் BBC தெரிந்தெடுத்து இருக்கும் 100 சக்தி மிகுந்த பெண்களுள் மூன்று இந்திய பெண்கள் இடம் பிடித்து இருப்பது பெருமைக்குரிய விடயமாக பார்க்கப்படுகிறது "