• India
```

ஸ்விட்சர்லாந்துல இந்த கிராமத்துல குடியேறினா...ஒரு குடும்பத்துக்கு 47 இலட்சமாம்...இப்பவே கிளம்பிடலாம் போலயே...!

This Village Offering Lakh To Settle There

By Ramesh

Published on:  2025-01-13 10:12:47  |    278

This Village Offering Lakh To Settle There - ஸ்விட்சர்லாந்து ஒரு பொருளாதார சரிவில்லாத நாடு, பல நாடுகளில் இருப்பவர்களும் தங்கள் பணத்தை அங்கு தான் முதலீடு செய்ய நினைப்பார்கள், அது மட்டும் அல்லாது பெரும்பாலான தொழிலதிபர்கள் தங்களது பணத்தை ஸ்விஸ் வங்கியில் போட்டு வைத்துக் கொள்வார்கள், பல தொழிலதிபர்களும் அங்கு பிராபர்ட்டிகளை வாங்கி போட்டு செட்டில் ஆவதும் உண்டு,

இந்த வகையில் ஸ்விட்சர்லாந்தை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் ஒரு அல்பினன் என்ற முனிசிபல் கிராமம், அங்கு குடியேறும் குடும்பத்திற்கு 50,000 CHF வழங்குமாம், அதாவது இந்திய மதிப்பில் கிட்டதட்ட 47 இலட்சத்தை நெருங்குமாம், இது போக பேச்சலராக இருக்கும் பட்சத்தில் 25,000 CHF (23.50 இலட்சம் INR) யும், குழந்தைகளாக இருக்கும் பட்சத்தில் 10,000 CHF (9.5 இலட்சம் INR) யும் வழங்கப்படுமாம்,



ஆனாலும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற குறைந்த பட்சம் அல்பினன் கிராமத்தில் ஒரு பிராபர்ட்டி இருக்க வேண்டுமாம், ஆனால் அந்த பிராபட்டி வாங்கவே 1.88 கோடி செலவு செய்ய வேண்டி வரும் என கூறப்படுகிறது, இது போக வெளிநாட்டவர்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற நிச்சயம் Permit C அனுமதி பெற்றிருக்க வேண்டும், குடியேறுபவர்களும் நிச்சயம் 10 வருடத்திற்கு மேல் அங்கு வசிக்க வேண்டுமாம்,

10 வருடத்திற்குள் அந்த கிராமத்தை விட்டு வெளியேறுபவர்கள் வாங்கிய பணத்தை திரும்பி செலுத்த வேண்டுமாம், பொதுவாக கிராமங்களை பொருளாதார ரீதியாக பலப்படுத்துவதற்காகவும், கிராமப்புற சூழலை மேம்படுத்தவும் இந்த ஒரு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு இருப்பதாக தெரிகிறது, ஆனாலும் இத்திட்டம் அங்கு செயலில் தற்போதும் இருக்கிறதா என்பது குறித்த தகவல் இல்லை.