அமெரிக்க விண்வெளி வீராங்கனை மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ், கடந்த ஆண்டு ஜூன் 6 ஆம் தேதி மூன்றாவது முறையாக விண்வெளி பயணத்தை மேற்கொண்டார்.
அமெரிக்க விண்வெளி வீராங்கனை மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ், கடந்த ஆண்டு ஜூன் 6 ஆம் தேதி மூன்றாவது முறையாக விண்வெளி பயணத்தை மேற்கொண்டார். போயிங் ஸ்டார்லைனர் கேப்சூல் மூலம் அவர் விண்வெளிக்குப் பயணித்த நிலையில், அவருடன் புட்ச் வில்மோர் என்பவரும் உடன் சென்றார். முன்னாள் திட்டப்படி, இருவரும் ஜூன் 14 ஆம் தேதிக்குள் பூமிக்கு திரும்ப இருந்தனர்.
ஆனால், ஸ்டார்லைனர் கேப்சூலில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவர்களின் தரையிறக்கம் தாமதமடைந்தது. இதனால், சுமார் 7 மாதங்களுக்கும் மேலாக சுனிதா வில்லியம்ஸ் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருக்கிறார். அங்கிருந்து பூமியில் இருக்கும் மாணவர்களுடன் கலந்துரையாடி வரும் அவர், தற்போது விண்வெளியில் ஒரு புதிய வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.
விண்வெளியில் மாபெரும் சாதனை:
விண்வெளியில் நீண்ட நேரம் நடைபயணம் (Spacewalk) செய்த முக்கிய வீராங்கனை என்ற சாதனையை சுனிதா வில்லியம்ஸ் படைத்துள்ளார். புட்ச் வில்மோருடன் சேர்ந்து, அவரின் ‘ஸ்பேஸ் வாக்’ 5 மணி நேரம் 26 நிமிடங்கள் நீடித்தது சாதனை படைத்துள்ளார். மேலும் இதுவரை 62 மணி நேரம் 6 நிமிடங்கள் விண்வெளியில் கழித்துள்ள அவர், அதிக நேரம் விண்வெளியில் இருந்த முன்னாள் வீரர் பெக்கி விட்சனின் சாதனையை முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.