• India
```

வழுக்கை தலையில் விளம்பரம்...ஒரு விளம்பரத்துக்கு 50000 ரூபாயாம்...கேரள இளைஞரின் விநோத யுக்தி...!

Shafeek Hashim Ads On Bald

By Ramesh

Published on:  2025-02-10 09:53:39  |    97

Ads On Bald - வழுக்கை தலையில் விளம்பரம் செய்ய ஒரு விளம்பரத்துக்கு ரூ 50,000, கேரள இளைஞரின் விநோத யுக்தி குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

கேரளா ஆழப்புழாவை சேர்ந்தவர் ஷபீக் ஹசீம், இவர் ஒரு காணொளிப் பதிவர், 70mm Vlogs என்ற பெயரில் யுடியூபில் ஒரு சேனல் வைத்து வீடியோக்களை பதிவிட்டு வருகிறார், இவரது சேனலுக்கு கிட்டத்தட்ட 29,000 பயனர்கள் சப்ஸ்கிரைப் பண்ணி இருப்பதாக தகவல், இவர் சமீபத்தில் முடி நடல் குறித்த ஒரு விளம்பரம் ஒன்றை அவருக்கு விளம்பரப்படுத்த வாய்ப்பு கிடைத்தது.

இதை எப்படி ஒரு கான்சப்ட் ஆக மாற்றலாம் என நினைத்து, அவரது வழுக்கை தலையிலேயே விளம்பரம் மேற்கொள்ளலாம் என முடிவெடுக்கிறார், இது குறித்து கடந்த ஜனவரி மாதம் ஒரு வீடியோவாக பதிவிடவே அந்த வீடியோ இணையத்தில் தாறுமாறாக வைரலானது, பின்னர் இதையே ஒரு விளம்பர யுக்தியாக பயன்படுத்தலாம் என முடிவெடுத்தார்.

மூன்று மாதம் அவரது வழுக்கை தலையில் விளம்பரம் செய்ய ரூ 50,000 என விலை நிர்ணயித்து வீடியோ ஒன்றை பதிவிட்டார், இவரின் விநோதமான விளம்பரம் பலராலும் நகைக்கப்பட்டாலும் கூட பல நிறுவனங்களுக்கு அது பிடித்து போனது, அது மட்டும் அல்லாது பல நிறுவனங்களிடம் இருந்தும் இவருக்கு விளம்பர வாய்ப்பு தேடி வந்து கொண்டு இருக்கிறதாம்.

வழுக்கை தலையை ஒரு சிலர் குறைவாக மதிப்பிட்டுக் கொண்டு இருக்கும் போது, அதையே ஒரு விளம்பர யுக்தியாக மாற்றி விநோதமாக விளம்பரம் செய்யும் ஷபீக் ஹசீம் நிறுவனங்களால் ஈர்க்கப்பட்டு இருக்கிறார், நாம் என்ன செய்கிறோம் என்பதில் யுக்தி அல்ல, நாம் என்ன புதுமையாக செய்கிறோம் என்பது தான் இங்கு யுக்தி, அது ஷபீக் ஹசீமிற்கு தோன்றி இருக்கிறது செயல்படுத்தி இருக்கிறார்.