World's First Carbon 14 Battery - ஐக்கிய இராச்சியத்தின் விஞ்ஞானிகள் அணுக்கழிவில் இருந்து நீண்ட காலம் இயங்க கூடிய பேட்டரி ஒன்றை கண்டு பிடித்து இருக்கிறார்களாம் அது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஐக்கிய இராச்சியத்தின் (UK) விஞ்ஞானிகள் பலர் இணைந்து அணுக்கழிவில் இருந்து கண்டு பிடித்து இருக்கும் பேட்டரி தற்போது உலகையே திரும்பி பார்க்க வைத்து இருக்கிறது, அப்படி என்ன இருக்கிறது இந்த பேட்டரியில் என்றால் அணுக்கழிவில் இருந்து தயாரிக்கப்படும் இந்த பேட்டரியை சார்ஜே ஏற்றாமல் 5,700 ஆண்டுகள் வரை பயன்படுத்த முடியுமாம்.
சரி இது உண்மையா, உண்மையில் சாத்தியமா என்றால் ஆம் சாத்தியம் தான், எப்படி சாத்தியம் என்றால், பொதுவாக அணுக்கரு உலையில் இருந்து கார்பன் 14 (C-14) என்ற கதிரியியக்க ஐசோடோப் ஒன்று வெளியாகும், இது பொதுவாக அணுக்கழிவாகவே பார்க்கப்படுகிறது, ஆனால் இதை வைத்து தான் விஞ்ஞானிகள் இந்த லாங் லாஸ்ட் பேட்டரி என்பதை தயாரித்து இருக்கின்றனர்.
சரி இந்த பேட்டரி எப்படி உருவானது என்றால், ஒரு செயற்கை வைர கட்டமைப்பிற்குள் இந்த C-14 பதிக்கப்படுமாம், இந்த வைரம், கதிர்வீச்சு கவசமாக மட்டும் செயல்படாமல், C-14 இன் கதிரியக்க சிதைவிலிருந்து வெளியாகும் ஆற்றலை மின்சாரமாக மாற்றுகிறதாம். இவ்வாறாகவே இந்த பேட்டரி செயல்படுவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இந்த கதிரியியக்க ஐசோடோப்பின் அரை ஆயுட்காலம் மட்டும் 5700 ஆண்டு காலம் என வரையறுக்கப்படுகிறது, இதனை பேட்டரியாக பயன்படுத்தப்படும் போது பேட்டரியும் 5700 ஆண்டுகள் சார்ஜே ஏற்றாமல் இயங்க கூடியதாக இருக்கும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஆனாலும் இந்த பேட்டரி குறைந்த அளவிலேயே பவரை உருவாக்கும்.
" மெடிக்கல் உபகரணங்கள், ரிமோட்கள், சென்சார்கள், குட்டி குட்டி பேட்டரிகள் எதில் எதில் எல்லாம் பயன்படுத்துகிறோமோ அவை அனைத்திலும் பயன்படுத்த முடியும் "