Roti Checker AI - பெங்களுருவை சேர்ந்த ஐஐடி பொறியாளர் ஒருவர் ரொட்டியின் ரவுண்ட் தன்மையை அறிவதற்கு AI ஒன்றை வடிவமைத்து வெளியிட்டு இருக்கிறார் அது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
கர்நாடகா மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர் அனிமேஷ் சவுகான், ஐஐடி கரக்பூரில் இளங்கலை பட்டம் முடித்தவர், ஒரு நாள் ரொட்டி சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் போது நண்பர்களுடன் செயற்கை நுண்ணறிவு குறித்து விவாதித்து இருக்கிறார், அப்படியே பேசும் போது காமெடியாக 'இந்த ரொட்டி சுடலாம் AI இருந்தா நல்லா இருக்கும்ல' என நண்பர்கள் பேசி இருக்கிறார்கள்.
அனிமேஷ் சவுகான் இதையே ஒரு காமெடியான ஐடியாவாக எடுத்துக் கொண்டு, சரி ரொட்டியின் வட்டத்தன்மையை உணரும் ஒரு AI சாதனத்தை உருவாக்கினால் என்ன என ஒரு ஐடியா இவருக்குள் முளைக்கவே, உடனடியாக அதற்கான முன்னெடுப்பையும் எடுத்து இருக்கிறார், அந்த ஐடியாவை வடிவமைத்து Rotichecker.ai என்றதொரு செயற்கை நுண்ணறிவு சாதனத்தை உருவாக்கி இருக்கிறார்.
இந்த ரொட்டி செக்கர் மூலம் ஒரு ரொட்டி எவ்வளவு ரவுண்டாக இருக்கிறது என்பதை உணர முடியும், ஒரு ரொட்டியை எடுத்து அதை இந்த செயற்கை நுண்ணறிவு சாதனத்தின் மூலம் ஸ்கேன் செய்யும் போது அது 100 சதவிகிதம் வரை அதன் வடிவமைப்பை அளந்து மதிப்பிடும் 90 சதவிகிதத்திற்கும் மேல் மதிப்பு வரும் போது அது சரியான ரவுண்டில் இருப்பதாக கொள்ளப்படுகிறது.
இதனை அனிமேஷ் இணையங்களில் பதிவிடவே அது வைரலாகி, அவருக்கு ஒரு குறிப்பிட்ட இன்வெஸ்ட்மெண்டையும் பெற்று தந்து இருக்கிறது, இவரது ரொட்டி செக்கருக்கு இணையங்களில் பல வித காமெடியான கமெண்ட்கள் வந்தாலும் கூட சின்ன சின்ன விடயங்களில் இருந்து தான் பெரிய விடயங்கள், பெரிய கண்டு பிடிப்புகள் உருவாகிறது என்பதையும் இணையவாசிகள் கருத்தில் கொள்ள வேண்டும்.