• India
```

ரெட் அலர்ட்டால் முடங்கிய தென் தமிழகம்...பெரும்பாலான பொருளாதார சந்தைகள் பாதிப்பு...!

Red Alert For South Tamil Nadu Most Of Economical Site

By Ramesh

Published on:  2024-11-21 16:47:55  |    214

Red Alert In South Tamil Nadu Impacts Nearly All Major Economic Centers - தென் தமிழகத்திற்கு விடுக்கப்பட்டு இருக்கும் ரெட் அலர்ட்டால், அங்கு இருக்கும் பெரும்பாலான பொருளாதார சந்தைகள் முடங்கி இருக்கின்றன.

Red Alert In South Tamil Nadu Impacts Nearly All Major Economic Centers - இந்திய வானிலை ஆய்வு மையம் தென் தமிழகத்திற்கு ரெட் அலர்ட் விடுத்து இருக்கிறது, பெரும்பாலான இடங்களில் அதிகனமழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு இருக்கிறது, ஏற்கனவே நாகை, வேதாரண்யம், மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடிகளில் மழை விடாது பெய்து வருகிறது, இந்த நிலையில் ரெட் அலர்ட் வேறு விடுத்து இருப்பதால் பெரும்பாலான பொருளாதார சந்தைகள் அவ்வாறாகவே முடங்கி கிடக்கின்றன.

காய்கறி ஏற்றி வந்த லாரிகள் கட்டை கூட அவிழ்க்க முடியாமல் சாலையோரங்களில் அப்படியே நிற்கின்றன, காலை 4 மணிக்கே இறக்கி விட்டு சிட்டிய விட்டு நகரும் லாரிகள் தற்போது எங்கும் நகர முடியாமல் மார்க்கெட்டுகளில் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன, இறக்கினால் இறக்குபவர்களுக்கு நட்டம், இறக்கா விட்டால் ஏற்றி அனுப்புபவருக்கு நட்டம்.



இரண்டுக்கும் இடையில் லாரி டிரைவர்கள் சிக்கி தவிக்கின்றனர், காய்கறி மார்க்கெட்டுகள் மட்டும் அல்லாது நகரங்களில் இருக்கும் பெரும்பாலான பொருளாதார மையங்கள் ஒட்டு மொத்தமாக முடங்கி கிடக்கிறது. மழை தொடர்ந்து பெய்து வருவதால் டெலிவரி தொழிலும் முடங்கி கிடக்கிறது, ஒரு நாளைக்கு 100 டெலிவரி செய்யும் டெலிவரிதாரர்களால் 10 கூட செய்ய முடியவில்லையாம்.

தொழிற்சாலைகளை பொறுத்தமட்டில் தூத்துக்குடியில் உப்பளங்கள் நீரில் மூழ்கி கிடக்கின்றன, குவித்து வைக்கப்பட்ட உப்பு அள்ள லாரிகள் வராமல் மழைகளில் கரைந்து ஓடிக் கொண்டு இருக்கின்றன, உரம், நெல், வாழை என பெரும்பாலான விவசாய பொருட்களும் ட்ரான்ஸ்போர்ட்டுகள் சரிவர இயங்க முடியாத நிலை இருப்பதால் ஆங்காங்கே முடங்கி கிடப்பதாக தகவல்.