Pink Auto Scheme Details In Tamil - தமிழக அரசு அறிமுகப்படுத்தி இருக்கும் பிங்க் ஆட்டோ திட்டம் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தேசம் முழுக்க பெண் குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், இனி பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள், பெண்கள் ஓட்டும் ஆட்டோவிலே ஏறி சவாரி செய்யும்படி பிங் ஆட்டோ திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது தமிழக அரசு, இது பெண்களின் பாதுகாப்பிற்கு மட்டும் பயன்படாமல் பெண்களுக்கான சுய தொழில் வாய்ப்புகளையும் உருவாக்கும்.
பொதுவாக பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தேசத்தில் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன, இதனால் பெண்கள் வெளியில் நடமாடவும், தனியாக எங்கேனும் பயணம் செய்யவும், இரவு நேரங்களில் ஆட்டோக்களை உபயோகிக்கவும் ரொம்பவே பயப்படுகின்றனர், அந்த வகையில் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் தான் இந்த பிங்க் ஆட்டோ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது.
சரி இந்த பிங் ஆட்டோ திட்டத்தில் அப்படி என்ன என்ன ஸ்பெசாலிட்டிகள் என்றால், இந்த ஆட்டோவின் ஓட்டுநர் பெரும்பாலும் பெண் டிரைவர்கள் ஆக இருப்பார்கள், ஆட்டோவில் ஜிபிஎஸ் வசதி இருக்கும், ஆட்டோவை எளிதாக ட்ராக் செய்ய முடியும், இது போக இந்த பிங்க் ஆட்டோ திட்டத்தில் இணைந்து சுயதொழில் புரிய நினைக்கும் பெண்களுக்கு அரசு மானியமும் வழங்குகிறது.
முதற்கட்டமாக சென்னை போன்ற பெருநகரங்களில் இந்த பிங்க் ஆட்டோ திட்டம் என்பது அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது, பின்னர் மெது மெதுவாக இத்திட்டம் தமிழகம் முழுக்க விரிவுபடுத்தப்படும் என தமிழக அரசு உறுதி அளித்து இருக்கிறது, இத்திட்டத்தின் மூலம் பெண்களின் பாதுகாப்பும், பெண்களின் சுயமுன்னேற்றமும் உறுதி செய்யப்படும்.