PF Withdrawal By ATM - அலைந்து திரிந்து எடுக்க வேண்டி இருக்கும் PF பணத்தை இனி ATM யிலே கிடைக்கும் வகையில் வழி வகை செய்ய இருக்கிறது மத்திய அரசு.
பிஎஃப் (PF) என்பது வருங்கால வைப்பு நிதி (Provident Fund) என்பதைக் குறிக்கும். இது, ஊழியர்களுக்கு நிதிப் பாதுகாப்பு மற்றும் ஓய்வூதியப் பலன்களை வழங்குவதற்காக அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம், பொதுவாக இந்த PF என்பது சம்பளத்தில் இருந்து எளிதாக எடுத்துக் கொள்ளப்பட்டு மாதம் மாதம் வருங்கால வைப்பு நிதியாக வரவு வைத்துக் கொண்டே வரப்படும்.
நமது அக்கவுண்ட்டில் இருந்து எளிதாக எடுத்துக் கொள்ளப்படும் இந்த வருங்கால வைப்பு நிதி (Provident Fund) என்பதை, நாம் எதாவது ஒரு அவசர தேவைக்கு எடுக்க நினைக்கும் போது தான் அதில் பல்வேறு சிக்கல்கள் வந்து நிற்கும், ஒரு அவசரத்திற்கு, ஒரு அவசர மருத்துவ செலவிற்கு, வீட்டில் ஏதாவது வைபவத்திற்கு என PF பணத்தை எடுக்க இணையத்தில் பதிவு செய்து வைத்து இருப்போம்.
அவர்கள் அது சரியாக இல்லை, இது சரியாக இல்லை என கூறி விண்ணப்பத்தை நிராகரித்து விடுவார்கள், இதனால் அந்த அவசர நிலையில் நம் பணம் PF ஆக இருந்தும் அதை எடுக்க முடியாத சூழல் உருவாகி விடும், பொதுவாக PF என்பதே பிற்கால பயன்களுக்கு தான் என்னும் போது அதை எடுக்க இத்துனை சிக்கல்கள் இருந்தால் பின்னர் எதற்காக தான் PF என்பது மக்கள் மனதில் தோன்றி விடும்.
அந்த சிக்கல்களை எல்லாம் களைய தான் மத்திய அரசு PF பணத்தை எளிதாக ATM யில் எடுக்கும் வசதி, UPI மூலம் சுய அல்லது பிற அக்கவுண்டுகளுக்கு மாற்றும் வசதி உள்ளிட்டவைகளை அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது, இனி உங்களது சுய PF பணத்தை எடுக்க அங்கும் இங்கும் அலையவோ, புரோக்கர்களை தேடி அலையவோ தேவை இல்லை.