• India
```

பூமியின் சுழற்சியை குறைத்த சீனாவின் Three Gorges Dam!! ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்..

NASA reveals impact of China Three Gorges Dam

By Dhiviyaraj

Published on:  2025-01-29 09:11:33  |    8

சீனாவின் Three Gorges Dam என்பது உலகின் மிகப்பெரிய அணையாகும். இதை கட்டுவதற்காக சுமார் 40,000 தொழிலாளர்கள் பணியாற்றினர்.

சீனாவின் Three Gorges Dam என்பது உலகின் மிகப்பெரிய அணையாகும். இதை கட்டுவதற்காக சுமார் 40,000 தொழிலாளர்கள் பணியாற்றினர். 1994-ஆம் ஆண்டு இந்த மெகா திட்டம் தொடங்கப்பட்டது, மேலும் 2011-ஆம் ஆண்டில் 31 மில்லியன் டாலர் செலவில் கட்டுமான பணிகள் நிறைவடைந்தன.

NASA ஆய்வு – Three Gorges Dam-ன் தாக்கம்

2005-ஆம் ஆண்டு, அமெரிக்காவின் நாசா (NASA) மேற்கொண்ட ஆய்வில், Three Gorges Dam-ல் தேக்கி வைக்கப்பட்டுள்ள பெரிய அளவிலான நீரின் அழுத்தம் பூமியின் நிலையை மாற்றியிருக்கலாம் என்று கூறப்பட்டது.

அணையின் நீர் பூமியின் தளர்வை (Tilt) சற்று மாற்றியுள்ளது.இதன் விளைவாக பூமியின் சுற்று வேகம் மாற்றம் அடைந்துள்ளது.

மேலும், ஒரு நாளின் நீளமும் மிகச்சிறிய அளவுக்கு அதிகரித்திருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த அணை சீனாவின் பொருளாதார வளர்ச்சியை பிரதிபலிக்கும் ஒரு முக்கியத்துவமான அடையாளம் என கருதப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.