• India
```

மிஷன் 500 என்பது என்ன...இந்தியா மற்றும் அமெரிக்கா இடையில் பேசப்பட்ட...இந்த ஒப்பந்தம் எதை குறிக்கிறது...?

India And US Aim To Double Bilateral Trade

By Ramesh

Published on:  2025-02-19 09:02:48  |    287

What Is Mission 500 - பிரதமர் மோடி மற்றும் ட்ரம்ப் பேச்சு வார்த்தையில் அறிவிக்கப்பட்ட மிஷன் 500 என்பது என்ன என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

சமீபத்தில் பிரதமர் மோடி அவர்கள் அமெரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான பல்வேறு விடயங்களை குறித்து டொனால்டு ட்ரம்ப் அவர்களிடம் பேசினார், வர்த்தக உறவுகள், நட்பு உறவுகள், வரி விதிப்பு, சமூக பொருளாதார பிரச்சினைகள், சுற்று சூழல் பிரச்சினைகள் என பல விடயங்களை மோடியும் ட்ரம்பும் பேசியதாக தெரிகிறது.

ஒரு சில ஒப்பந்தங்களும் கையெழுத்து ஆனதாக கூறப்படுகிறது, முக்கியமாக அமெரிக்க அதிபர் ட்ரம்பும், மோடியும் இணைந்து மிஷன் 500 என்றதொரு விஷயத்தை வெளியிட்டனர், அந்த மிஷன் 500 என்பது வேறு ஒன்றும் இல்லை, இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான ஒரு வர்த்தக பரிமாற்றத்தை குறிப்பதாக அமைவதாக கூறுகின்றனர்.



அதாவது இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான வர்த்தக பரிமாற்றம் என்பது தர்போது 250 பில்லியன் டாலர்களை நெருங்குகிறது, இது ஒரு அதிகபட்ச தோராயமான வர்த்தக பரிமாற்றம், இந்த வர்த்தக பரிமாற்றத்தை இரண்டு மடங்குகளாக்கி 2030 க்க்குள் அதன் மதிப்பை 500 பில்லியன் டாலரை அடைவது தான் இந்த மிஷன் 500 என்பதன் குறிக்கோளாக அறியப்படுகிறது.

பொதுவாக இந்தியா என்பது வர்த்தகத்திற்கான ஒரு மிகப்பெரிய சந்தை, பெரும்பாலும் இந்திய சந்தைகளை ஆட்கொள்ளும் சீன பொருட்களை குறைத்து அமெரிக்க பொருட்களை அந்த இடத்தில் வைப்பது தான் ட்ரம்பின் குறிக்கோள், இதனால் அமெரிக்காவின் வர்த்தகமும் மேம்படும், அதே சமயத்தில் இந்திய மார்க்கெட்டில் சீன பொருட்களின் ஆதிக்கமும் குறையும்.