• India
```

Skype நிறுவனத்தை மொத்தமாக இழுத்து மூடும் மைக்ரோசாப்ட்...என்ன காரணம்...?

Microsoft Is Discontinuing Skype

By Ramesh

Published on:  2025-03-01 15:14:17  |    205

Microsoft Is Discontinuing Skype - பிரபல மைக்ரோசாப்ட் நிறுவனம் Skype நிறுவனத்தை மொத்தமாக இழுத்து மூட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது, அது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இரண்டாயிரத்தின் மிட்களில் Skype செயலி என்றால் அவ்வளவு பிரபலம், ஒரு காலக்கட்டத்தில் சர்வதேச கால்களுக்கு தாறுமாறான நெட்வொர்க் கட்டணங்கள் இருக்கும், அந்த காலக்கட்டத்தில் வெளிநாட்டில் வேலை செய்பவர்கள், தங்கள் வீட்டில் இருப்பவர்களிடம் கால் பேசவே, தங்களது வருமானத்தில் எப்படியும் ஒரு 20 சதவிகிதத்திற்கும் மேல் செலவிட வேண்டி இருந்தது.

அப்போது 2003 ஆம் காலக்கட்டம், Skype செயலி எஸ்டோனியாவில் அறிமுகப்படுத்தப்படுகிறது, இந்த Skype செயலியின் மூலம் உலகின் எந்த மூலையில் இருந்தும் இணைய வசதியுடன் இலவசமாக சர்வதேச அளவில் பேச முடியும், அப்போது இருந்த தேவைக்கு ஏற்ப செயலி வடிவமைக்கப்பட்டு இருந்ததால் குறிப்பிட்ட சிறிது காலங்களிலேயே Skype உலகளாவிய அளவில் மிக மிக பிரபலம் ஆனது.

பல முன்னனி நிறுவனங்கள் Skype யை கைப்பற்றுவதற்கு வலை விரித்து கடைசியாக, 2005 ஆம் ஆண்டு ePay நிறுவனத்தின் வசம் Skype சென்றது, ஆனால் இந்த பார்ட்னர்சிப் என்பது சிறிது காலம் கூட நீடிக்கவில்லை. ஒரு கட்டத்திற்கு பின்னர் ePay, Skype யின் 65 சதவிகித பங்குகளை முதலீட்டாளர்கள் குழுவிடம் விற்றது, அதில் அதிகபட்ச பங்குகளை மைக்ரோசாப்ட் நிறுவனம் பெற்று இருந்தது.

பின்னர் 2011 காலக்கட்டங்களில் Skype ஒட்டு மொத்தமாக மைக்ரோசாப்ட் வசம் சென்றது, அதற்கு பின்னர் உருவெடுத்த நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் நவீன சமூக வலைதளங்களால் Skype பயன்படுத்துபவர்கள் குறைந்து கொண்டே வந்தனர், தற்போது பயனாளர்களின் எண்ணிக்கை மிக மிக குறைந்த நிலையில் மைக்ரோசாப்ட் Skype செயலியை ஒட்டு மொத்தமாக இழுத்து மூடுவதாக அறிவித்து இருக்கிறது.