உலகின் முன்னணி நிறுவனங்கள் ஏ.ஐ. (செயற்கை நுண்ணறிவு) வளர்ச்சியில் அதிக முதலீடு செய்யும் நிலையில், மெட்டா (Meta) நிறுவனம் தனது பணியாளர்கள் அமைப்பில் பெரும் மாற்றம் செய்ய முடிவு செய்துள்ளது.
பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைத்தளங்களை இயக்கும் மெட்டா நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க், 3,600 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளார். இதற்குப் பதிலாக, திறமையான புதிய ஊழியர்களை பணியமர்த்தும் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது.
இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், இது நிறுவன கொள்கை சீரமைப்பின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்படுகிறது.ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட வேலைத் திறனை எட்டாத 5% ஊழியர்களை குறைக்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பணி நீக்கம் செய்யப்படுபவர்களுக்கு உரிய இழப்பீடுகள் வழங்கப்படும்.72,000 பணியாளர்களில் 3,600 பேர் இந்த மாற்றத்துக்கு உட்படுவார்கள். என்று எதிர்காலத்தில், மேலும் திறமையான பணியாளர்களைச் சேர்ப்பது நிறுவனத்தின் முக்கிய இலக்காக இருக்கும் என்று தெரிவித்து இருக்கிறது.