World Oldest App Developer - ஜப்பானை சேர்ந்த வயதான பாட்டி ஒருவர் தனது 81 வயதில் கோடிங் கற்றுக்கொண்டு ஆப்பிள் போனுக்கே கேம் தயாரித்து இருக்கிறார்.
மசாகோ வகாமியா, ஜப்பானை சேர்ந்த 89 வயது பாட்டி, இவர் ஆரம்ப காலத்தில் அபாகஸ் கற்றுக் கொண்டு அது ரீதியான ஒரு பணியை செய்து வந்தார், புது புது விடயங்களை கற்றுக் கொள்ள ஆர்வம் காட்டும் மசாகோ வகாமியா எப்போதுமே கற்றுக் கொள்ள வயதை தடையாக நினைத்தது இல்லை, தனது ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒவ்வொன்றை கற்றுக் கொண்டே வந்து இருக்கிறார்.
அந்த வகையில் தனது 60 வயதில் தனது முதல் கம்ப்யூட்டரை வாங்கி இருக்கிறார், மசாகோவிற்கு கோடிங் கற்றுக் கொள்ள ஆர்வம் வந்து இருக்கிறது, முதலில் கோடிங் குறித்து அடிப்படை புரிதலே இல்லாத மசாகோ வகாமியா அதை ஸ்க்ரேட்சிலிருந்து தனக்கு தானே கற்றுக் கொள்ள முனைந்து இருக்கிறார், தொடர்ந்து பிராக்டிஸ்கள் மேற்கொண்டு கற்றும் முடித்து இருக்கிறார்.
முறையாக கற்றுக் கொண்டு முடித்ததும், ஆப்பிள் போனுக்கு சப்போர்ட் ஆகும் வகையில் ஒரு கேமை தானாக டிசைன் செய்து அதை வெளியிட்டும் இருக்கிறார், இதன் மூலம் உலகின் மிக மிக வயதான செயலி வடிவமைப்பாளராக மசாகோ வகாமியா அறியப்படுகிறார், அவர் வடிவமைத்த கேமும் அனைவராலும் ரசித்து விளையாடப்படுவதாக கூடுதல் தகவல்.
கனவுகளை நனவுகளாக்கவோ, அறிவுகளை விரிவுபடுத்தவோ, புது புது கண்டுபிடிப்புகளை மேற்கொள்ளவோ, புது புது தொழில் மூல தனங்களை உருவாக்கவோ வயது என்பது தடையில்லை என்பதற்கு மசாகோ வகாமியா சான்றாக நிற்கிறார், எத்தனை வயதாக இருந்தால் என்ன, வயது என்றுமே அறிவுகளுக்கும் கண்டு பிடிப்புகளுக்கும் தடையாக இருந்து விடாது.