• India
```

ஹீண்டாய் மற்றும் மாருதி சுசுகி கார்களின் விலை உயருகிறது...ஏன் தெரியுமா...?

Maruti And Hyundai Set To Increase Car Prices

By Ramesh

Published on:  2024-12-07 16:48:03  |    133

Maruti And Hyundai Set To Increase Car Prices - மூலப் பொருள்களின் விலை உயர்வால் ஹீண்டாய் மற்றும் மாருதி சுசுகி கார்களின் விலை உயர இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Maruti And Hyundai Set To Increase Car Prices - உலகளாவிய அளவில் அதிக கார்களை உற்பத்தி சந்தைப்படுத்துவதில் சீனா முதலிடம் வகிக்கிறது, இரண்டாம் இடத்தில் அமெரிக்கா இருக்கிறது, இதில் இந்தியாவின் இடம் என்பது நான்காவது இடமாக இருக்கிறது, இந்தியாவில் கிட்டதட்ட 5.9 மில்லியன் கார்கள் கடந்த நிதி ஆண்டில் தயாரிக்கப்பட்டு சந்தைப்படுத்தப்பட்டு இருப்பதாக தகவல்.

மாருதி, ஹீண்டாய், டாடா மோட்டார்ஸ், அஷோக் லேலாண்ட், மஹிந்திரா & மஹிந்திரா உள்ளிட்ட பல நிறுவனங்கள் கார்களை தயாரித்து சந்தைப்படுத்தி வருகின்றன, இந்தியாவில் தயாரிக்கப்படும் ஒட்டு மொத்த கார்களுள் 48% கார்கள் மாருதி சுசுகி இந்தியா தயாரிப்பதாக தகவல், ஹீண்டாய் இந்தியாவின் 5 ஆவது மிகப்பெரிய கார் உற்பத்தியாளராக இருக்கிறது.



இந்த நிலையில் மாருதி சுசுகி நிறுவனமும், ஹீண்டாய் நிறுவனமும் கார் விலையை உயர்த்த இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது, கார் தயாரிப்பதற்கான மூலப் பொருள்களின் விலை அதிகரித்துக் கொண்டே இருப்பதால் ஹீண்டாய் நிறுவனமும், மாருதி சுசுகி நிறுவனமும் இந்த விலை அதிகரிப்பு நடவடிக்கையை எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்த விலை அதிகரிப்பு என்பது கார் விலையில் இருந்து நான்கு சதவிகிதமாக இருக்கலாம் என கூறப்படுகிறது, இதற்கு மூலப் பொருள்களின் விலை உயர்வு மட்டும் காரணம் என்று சொல்லி விட முடியாது, எலக்ட்ரிக் வாகனங்களின் நுகர்வு அதிகரிப்பால் பல ஆட்டோ மொபைல் நிறுவனங்களின் செயல்பாடுகளே மாறிக் கொண்டு இருக்கிறது, இதனால் நிறுவனங்கள் கொள்கின்ற மாற்றங்கள் நிறுவனங்களுக்கு வருமான இழப்பை தருகின்றன. இதுவும் கார் விலை உயர்வுக்கு காரணம் என்று சொல்லலாம்.