• India

இனி திருமணத்தை பதிவு செய்ய...பத்திர பதிவு அலுவலகம் செய்ய தேவையில்லை...இணைய வழியாகவே செய்து கொள்ளலாம்...!

New Marriage Registration

By Ramesh

Published on:  2025-01-03 03:23:54  |    51

Marriage Registration Made Easy - பொதுவாக திருமணம் என்பது இருசாரர் விருப்பப்படி, இரு குடும்பங்களின் விருப்பப்படி முறைப்படி, நடந்தாலும் கூட, அதை முறையாக பத்திரப்பதிவு அலுவலகங்களில் பதிவு செய்து கொள்வது மிக மிக அவசியம் ஆகிறது, அதுவே இருவரும் அதிகாரப்பூர்வமாக திருமண பந்தத்திற்குள் இணைந்ததற்கு சரியான சாட்சியாகவும் கொள்ளப்படும், 

ஆனால் தமிழகத்தை பொறுத்தவரை 5 திருமணங்கள் நடைபெற்றால் அதில் மூன்று முறையாக பத்திரப்பதிவு அலுவலகங்களில் ரிஜிஸ்டர் செய்யப்படுவது இல்லையாம், காரணம் ரிஜிஸ்டர் செய்வதில் இருக்கும் பல்வேறு சிக்கல்கள் என கூறப்படுகிறது, அதாவது ரிஜிஸ்டர் செய்வதற்கு 300 ரூபாய் தான் என்றாலும் கூட இடைத்தரகர்கள் மூலமாகவே செல்ல வேண்டிய நிலை இருப்பதால் ரூ 5000 வரை ஆகுவதாக தகவல்.



நேரடியாக பத்திர பதிவு அலுவலகங்களுக்கு சென்று திருமண பதிவு குறித்த விவரங்கள் கேட்டாலும் கூட, அங்கு இருப்பவர்களும் ஏதாவது இடைத்தரகர்களையே கை காட்டுகிறார்களாம், இதனால் எல்லா ஆவணங்களும் இருந்தாலும் கூட இடைத்தரகர்கள் மூலமாகவே ரிஜிஸ்டர் ஆபிஸ்க்குள் நுழைய முடிவதாக பயனர்கள் தொடர்ந்து புகார் கூறி வருகின்றனர்.

இதனால் பல்வேறு திருமணங்கள் பத்திர பதிவு அலுவலகங்களில் ரிஜிஸ்டர் செய்யப்படாத சூழல் உருவாகி இருக்கிறது, இந்த இடைத்தரகர்களை களையும் வகையில், திருமணப்பதிவை எளிதாக்க அரசு திட்டமிட்டு இருக்கிறது, வர இருக்கும் வழிமுறைகள் மூலம் இனி திருமணப்பதிவுகளை முறையான ஆவணங்களுடன் இணையத்திலேயே பதிவு செய்து கொள்ள முடியுமாம். ரிஜிஸ்டர் ஆபிஸ்க்கு செல்லவே தேவை இல்லையாம்.