Make in India Scheme-மேக் இன் இந்தியா என்ற திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட இந்திய பொருட்கள் அனைத்தும் இன்று உலகளாவிய அளவில் ஏற்றுமதி ஆவதாக ஒன்றிய அரசு கூறி இருக்கிறது.
சரி, முதலில் மேக் இன் இந்தியா என்பது என்ன?
நாம் சர்வதேச நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் பல பொருள்களை, உள்நாட்டிலேயே முழுக்க முழுக்க தயாரித்து, தேசத்திற்கு ஒப்படைப்பது தான் ஒன்றிய அரசின் இந்த மேக் இன் இந்தியா திட்டம். ஒரு நிறுவனத்திடம் ஒரு உற்பத்தி ஐடியா இருப்பின், அது தேசத்திற்கு தேவை என்னும் பட்சத்தில் அதற்கு ஒன்றிய அரசு, அந்த நிறுவனத்திற்கு தேவையான நிதி மற்றும் ஒரு சில உதவிகளை வழங்கி அந்த உற்பத்திக்கு உதவுகிறது. பின்னர் அந்த பொருள்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி ஆவது குறைக்கப்பட்டு, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அந்த உற்பத்தி, தேசம் எங்கும் கொண்டு செல்லப்படுகிறது. தேசத்திற்கு போக உற்பத்தி மிச்சம் இருப்பின் அது பிற தேவை உள்ள நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
“ உலகளாவிய அளவில் தேசத்தின் தொழில்துறையை இத்திட்டம் முன்னிறுத்தி இருக்கிறது, தொடர்ந்து இத்திட்டத்தின் கீழ் தேசம் பின்னடைவில் இருக்கும் ஒரு சில தொழில்களை ஊக்குவித்தால் நாடு அனைத்திலும் தன்னிறைவு பெற அது உதவிகரமாக அமையும் “