Maharaja China Collection - இயக்குநர் நித்திலன் சுவாமி நாதன் அவர்களின் இயக்கத்தில், விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப், நட்டி நடராஜ், மம்தா மோகன்தாஸ், திவ்ய பாரதி, சாச்சனா உள்ளிட்ட பலரின் நடிப்பில் உருவான மஹாராஜா திரைப்படம், கடந்த வருடத்தின் மிகச்சிறந்த படைப்பாக அறியப்பட்டது, மிகச்சிறந்த படைப்பாக மட்டும் அல்லாமல் வசூலிலும் 300 மடங்குக்கு மேல் இலாபத்தை ஈட்டியது.
இந்த நிலையில் சீனாவில் கடந்த அக்டோபர் மாதம் மஹாராஜா திரைப்படம் வெளியிடப்பட்டது. மிகப்பெரிய அளவில் பல திரைகளில் வெளியான மஹாராஜா திரைப்படம் அங்கும் தற்போது 100 கோடி வசூலை நெருங்கி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது, நல்ல படைப்பிற்கு பார்வையாளர்களே பான் இந்தியா திரைப்படமாக சான்றளிப்பார்கள் என்பதற்கு மஹாராஜா சிறந்த சான்று.
அதிலும் கிட்டத்தட்ட சீனாவில் கடந்த 5 வருடங்களாக, வெளியான எந்த இந்திய திரைப்படமும் வசூலில் செய்யாத சாதனையை தற்போது மஹாராஜா நிகழ்த்தி இருப்பதாகவும் கூறி வருகின்றனர், கடைசியாக அமீர்கான் அவர்களின் தங்கல் திரைப்படத்திற்கு சீனாவில் மிகப்பெரிய மார்க்கெட்டும் எதிர்பார்ப்பும் இருந்தது, அதற்கு பின் அதே வரவேற்பு தற்போது மஹாராஜாவிற்கு கிடைத்து இருக்கிறது.
'லெட்சுமியை காணும் சார்' என்று ஆரம்பிக்கும் படம், பின்னர் லேயர் லேயர்களாக பிரிந்து அப்படியே நம்மை கண் அசராமல் உட்கார வைக்கும், இடைவெளியில் பலரும் சீட் எட்ஜில் அடுத்து என்ன நடக்கும் என பார்த்துக் கொண்டே இருப்பதை உணர முடிந்தது, அந்த அளவிற்கு படம் எழுதப்பட்ட விதம் அனைவரையும் கவர்ந்தது, இன்னும் வசூலில் பல சாதனைகளை மஹாராஜா புரிந்தும் என்பதில் எந்த வித ஐயமும் இல்லை.