Maha Kumbh Mela Scam - மகா கும்பமேளாவை மையமாக வைத்து நடந்த விநோதமான மோசடி குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
பொதுவாக கும்பமேளா என்பது அலகாபாத், ஹரித்வார், உஜ்ஜைன், நாசிம் உள்ளிட்ட நான்கு இடங்களில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாறி மாறி நடைபெறும், அந்த வகையில் 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் மகா கும்பமேளா என்பது கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் சங்கமம் ஆகும் அலகாபாத் (பிரயாக்ராஜ்) நகரில் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.
இந்த மகா கும்பமேளா ஒரு ஆன்மிக தளம் ஆக மட்டும் இல்லாமல் பல மோசடிகள் அரங்கேறும் மையமாகவும் தற்போது மாறி வருகிறது, ஏற்கனவே கும்பமேளாவில் குளிக்கும் பெண்களின் போட்டொ மற்றும் வீடியோக்கள் பதிவிடப்பட்டு இணையத்தில் கசிந்தது, ஒரு சிலர் அந்த வீடியோக்களை இணையங்களில் விற்பனை செய்து வருவதாகவும் புகார் எழுந்தது.
இது ஒரு புறம் நடக்க இன்னொரு பக்கம் மகா கும்பமேளாவை வைத்து இன்னொரு மிகப்பெரிய மோசடி சமூக வலைதளங்களில் அரங்கேறி இருக்கிறது, அதாவது 'கும்பமேளாவிற்கு நேரடியாக வர முடியாதவர்கள் உங்களது போட்டோக்களை மட்டும் அனுப்பி ரூ 500 ம் அனுப்புங்கள், உங்கள் புகைப்படம் பிரக்யாக்ராஜ் சங்கமத்தில் நனைக்கப்படும்' என்பது அந்த விளம்பரம்.
இப்படி ஒரு விளம்பரத்தை நம்பி தேசம் முழுக்க பலரும் ரூபாயையும் போட்டோவையும் அந்த மோசடி குழுவிடம் பகிர்ந்ததாகவும் கூறப்படுகிறது, ஆனால் பகிர்ந்தவுடன் தொடர்பு துண்டிக்கப்பட்டது தான் மிச்சமாம், இவ்வாறு மகா கும்பமேளாவை பயன்படுத்திக் கொண்டு நடைபெறும் மோசடிகளில் யாரும் சிக்கிட வேண்டாம் என சைபர் கிரைம் எச்சரித்து இருக்கிறது.