Madurai's Pet Breeding Regulations - மதுரை மாநகராட்சி உட்பட்ட பகுதிகளில் இனி மாடு, பூனை, நாய் வளர்ப்போர்கள் அதற்கான உரிம கட்டணத்தை செலுத்த வேண்டும் என்ற அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
பொதுவாக மாநகராட்சி பகுதிகளில் சாலைகளில் அதுவாக சுற்றித் திரியும் ஆடு, மாடு, நாய், கழுதை, பூனைகளால் பல அசவுகரியங்களை மக்கள் உணர்கிறார்கள், அதுவும் நகரின் பல முக்கிய சாலைகளில் ஆடுகள், மாடுகள் ஆக்கிரமித்து விடுவதால் அது விபத்துகள் அரங்கேறவும் வாய்ப்புகளை அதிகரிக்கின்றன, நாய்களும் அவ்வப்போது பைக்குகளின் குறுக்கே விழுந்து விபத்துகள் ஏற்படுகின்றன.
அது மட்டும் அல்லாது ஒரு சில நாய்கள் காலையில் வால்க்கிங் செல்பவர்களை துரத்தி கடிக்கும் பாணியில் ஈடுபடுவதால் மக்கள் அதற்கு வேறு அச்சப்பட வேண்டி இருக்கிறது, ஒரு சில வீட்டு நாய்களையும் வீட்டார்கள் கட்டவிழ்த்து விடுவதால் சாலையில் சும்மா நடப்பவர்களை கூட அந்த நாய்கல் சீண்டி பார்க்கின்றன, இவ்வாறாக இந்த புகார்கள் அதிகரித்ததால் மதுரை மாநகராட்சி ஒரு முடிவெடுத்து இருக்கிறது.
கடந்த ஆண்டே இந்த புகார்கள் மதுரை மாநகராட்சி மீட்டிங்கில் விவாத பொருள் ஆகிய நிலையில் தற்போது மாநகராட்சியே முன் வந்து அறிக்கை விடுத்து இருக்கிறது, அதாவது மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இருக்கும் வீடுகளில் ஆடு, மாடு, நாய், பன்றி, கழுதை வளர்ப்பவர்கள் முறையாக மதுரை மாநகராட்சியில் அதற்கான உரிமம் பெற்றிருக்க வேண்டுமாம்.
அதாவது நாய், பூனை போன்ற வளர்ப்பு பிராணிகளுக்கு ரூ 750 யும், மாடு, ஆடு போன்ற வளர்ப்பு பிராணிகளுக்கு ரூ 500 யும் செலுத்தி சரியான உரிமம் வாங்க வேண்டும், இதற்கான தீர்மானம் என்பது இரண்டாவது முறையாக மதுரை மாநகராட்சியில் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது, எப்போது மாநகராட்சியில் அமலுக்கு வரும் என்பது குறித்த தகவல்கள் இல்லை.