தென்னிந்திய அளவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தான் கல்யாணி பிரியதர்ஷன். ஆரம்பத்தில் மலையாள படங்களில் நடித்து வந்த இவர், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த ஹீரோ படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இப்படத்தை தொடர்ந்து சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்த மாநாடு படத்தில் ஹீரோயினாக நடித்து இருந்தார். தற்போது கல்யாணி பிரியதர்ஷன் மலையாள படங்களில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் கல்யாணி பிரியதர்ஷன் BMW X7 இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இவர் பயன்படுத்தும் இந்த கார் அதிக சொகுசு மற்றும் இட வசதியைக் கொண்ட ஓர் கார் மாடலாகும். கல்யாணி பிரியதர்ஷன் மற்றுமின்றி பல திரைபிரபலங்கள் இந்த BMW X7 கரை பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் BMW X7 சொகுசு கார் ரூ. 1.18 கோடி தொடங்கி ரூ. 1.78 கோடி வரையிலான விலையில் விற்கப்படுகின்றது.