Indigo Listed As World Worst Airline In AirHelp Score 2024 - ஐரோப்பிய ஒன்றியத்தை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் Airhelp நிறுவனம் உலகின் சிறந்த மற்றும் மோசமான சேவைகளை தரும் விமானங்களின் பட்டியலை வெளியிட்டு இருக்கிறது, இந்த பட்டியலில் சிறப்பான விமான சேவையை தருவதாக பெல்ஜியத்தை மையமாக கொண்டு செயல்படும் Brussels ஏர்லைன் 8.12 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது.
கத்தார் ஏர்லைன்ஸ் 8.11 புள்ளிகளுடன் இப்பட்டியலில் இரண்டாம் இடத்திலும், அமெரிக்காவை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் United Airlines 8.04 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும் இருக்கிறது, வடக்கு ஆப்பிரிக்காவின் துனிசியாவை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் TunisAir இப்பட்டியலில் உலகின் மிக மோசமான விமான சேவையை தரும் ஏர்லைனாக வரிசைப்படுத்தப்பட்டு இருக்கிறது.
குர்கான், ஹரியானாவை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் இந்தியாவின் மிகப்பெரிய ஏர்லைன் நிறுவனமாக அறியப்படும், Indigo நிறுவனம், Airhelp Score யின் இந்த பட்டியலில் பத்திற்கு வெறும் 4.3 என மிக மிக குறைந்த புள்ளிகள் எடுத்து, வாடிக்கையாளர்களுக்கு மிக மோசமான சேவையை தருவதாக 103 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறது,
பொதுவாக சரியான நேரத்திற்கு வருகை மற்றும் புறப்பாடு, வாடிக்கையாளர்களின் பயன்பாடு தரவு, Claim செயல்பாடுகள், Ground செயல்பாடுகள் ஆகியவற்றை மையமாக கொண்டு இந்த புள்ளிகள் கொடுக்கப்படுகின்றன, Airhep யின் இந்த தரவுகளுக்கு Indigo மறுப்பு தெரிவித்து இருக்கிறது, Airhelp யின் இந்த தரவுகள் வெளிப்படைத்தன்மையற்றதாக இருப்பதாகவும் Indigo சாடி இருக்கிறது.