Indians Own More Property In London Than English Men - இலண்டனில், அங்கு வசிக்கும் பூர்வ குடிகளை விட, இந்தியர்களே அதிக சொத்துக்களை தன்வசப்படுத்தி இருப்பதாக பிரபல நாளிதழ் ஒன்று வெளியிட்ட அறிக்கையில் தெளிவாகி இருக்கிறது, அவ்வாறாக இந்தியர்கள் இலண்டனில் வாங்கிய அனைத்து சொத்துக்களும் முறையாக சட்டபூர்வமாக ரிஜிஸ்டர் செய்யப்பட்டே வாங்கப்பட்டு இருப்பதாகவும் அந்த நாளிதழ் கூறி இருக்கிறது,
இந்த தகவல் இணையத்தில் கசியவே இந்தியர்கள் பலரும் இங்கிலாந்தையும், ஆங்கிலேயர்களையும் கிண்டல் அடித்து வருகின்றனர், அதாவது காலனித்துவ ஆட்சியில் ஆங்கிலேயர்கள், இந்திய நிலங்களை கையகப்படுத்தி இந்தியர்களை அடிமையாக நடத்தி, பல்வேறு சொத்துக்களையும், பல ட்ரில்லியன் மதிப்பிலான பொருள்கையும் கொள்ளையடித்துச் சென்றதாக ஒரு வரலாறு உண்டு.
ஆனால் குறிப்பிட்ட இந்த 80 வருடத்திற்குள் இந்தியர்கள் படிப்பிலும் பொருளாதாரத்திலும் மேன்மை அடைந்து இங்கிலாந்தையும் இலண்டனையும் ஆதிக்கம் செலுத்தும் அளவிற்கு வளர்ந்து விட்டனர், இது தான் கர்மா, என நெட்டிசன்கள் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர், இது போக இங்கிலாந்து அருங்காட்சியகத்தில் இருக்கும் 90% பொருட்கள் ஆங்கிலேயர்கள் இந்தியாவில் இருந்து எடுத்து சென்றது தான் எனவும் பதிவிட்டு இருக்கின்றனர்.
பொதுவாக இலண்டனில் வசிக்கும் தற்போதைய இந்தியர்கள் எல்லாம் ஒரு காலத்தில் படிப்பதற்காக சென்றதாகவும், பல வருடங்களாக அங்கேயே வசித்து தங்களுடைய பொருளாதாரத்தை மேம்படுத்தி இருக்கின்றனராம், இது போக பல பாலிவுட் பிரபலங்களுக்கும், கிரிக்கெட்டர்களுக்குமே இலண்டனில் பல மில்லியன் டாலர்களுக்கு சொத்துக்கள் இருக்கிறதாம்.