• India
```

கை விலங்கிட்டு கால் விலங்கிட்டு...கைதிகள் போல அழைத்து வரப்பட்ட இந்தியர்கள்...அமெரிக்காவின் வழக்கம் தான் என கூறி சமாளித்த ஒன்றிய அமைச்சர்...!

US Sends Back Indian Immigrants

By Ramesh

Published on:  2025-02-07 09:30:08  |    26

Indian Immigrants Handcuffed - அமெரிக்காவில் இருந்து ராணுவ விமானம் மூலம் அனுப்பப்பட்ட 104 இந்தியர்களும் கைகளிலும், கால்களிலும் விலங்கிடப்பட்டு அனுப்பப்பட்ட விவகாரம் விஸ்வரூபாம் எடுத்து இருக்கிறது.

அமெரிக்காவில் குடியேறி இருக்கும் 55 இலட்சம் இந்தியர்களுள் 8 இலட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் சரியான ஆவணங்கள் இன்றி வசித்து வருவதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது, அந்த வகையில் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு ஆவணங்களின்றி வசித்து வந்த 104 இந்தியர்களை அடையாளம் கண்டு இந்தியாவிற்கு அனுப்பி வைத்து இருந்தது.

இது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் அமெரிக்கா ஏற்கனவே தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது, ஆனால் அந்த 104 இந்தியர்களும் கைகளில் விலங்கிடப்பட்டும், கால்களில் விலங்கிடப்பட்டும் கைதிகள் போல இராணுவ விமானங்களில் அழைத்து வரப்பட்டதாக ஒரு தகவல் வெளிவந்தது, ஆனால் முதலில் மத்திய அமைச்சகம் இந்த தகவலை மறுத்தது.



ஆனால் அமெரிக்காவின் இராணுவ அதிகாரி ஒருவரே, இந்தியர்கள் கைகளிலும் கால்களிலும் விலங்கிடப்பட்டு இராணுவ விமானத்தில் ஏற்றப்படும் வீடியோவை வெளியிட்டதால், இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது, முதலில் இந்த விவகாரத்தை மறுத்த அமைச்சகம், வீடியோ வெளியானதும் இது அமெரிக்காவின் வழக்கம் என கூறி சமாளித்து இருக்கிறது.

உணவு அருந்த கூட கை விலங்கை, கால் விலங்கை அவிழ்த்து விடவில்லை என வந்தவர்கள் கூறுகின்றனர், வல்லரசு நாட்டில் வேலை பார்க்க ஆசைப்பட்டு 40 இலட்சம், 50 இலட்சம் என கொடுத்து ஏஜெண்ட் மூலம் சென்று அமெரிக்காவில் இறங்கிய இந்தியர்கள், அவமானப்படுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்ட விவகாரம் பாராளுமன்றத்திலும் விவாதப் பொருளாகி இருக்கிறது.