HMPV Update In India - HMPV எனப்படும் ஹியூமன் மெட்டா நியூமோ வைரஸ் சீனாவில் வேகமாக பரவி வந்த நிலையில் சீன மருத்துவமனைகள் நிரம்பி வழிந்து வருவதாக சீன சுகாதாரத்துறை அறிக்கை விடுத்து இருந்தது, இந்த நிலையில் அந்த HMPV தொற்று இந்தியாவிலும் ஆங்காங்கே துளி துளியாக பரவி வருவதாக நேற்றைய தினமே ஒரு தகவல் மீடியாக்களில் வலம் வந்தது.
அதாவது முதலாவதாக கர்நாடகாவில் இரண்டு பச்சிளங் குழந்தைகளுக்கு HMPV தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளி வந்தது, பின்னர் குஜராத்தில் ஒன்று, தமிழகத்தில் இரண்டு என மாலையே மொத்தம் 5 தொற்றுகள் உறுதியானது, இந்த நிலையில் புதிதாக இரண்டு தொற்றுகள் நாக்பூரிலும் பதிவாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ஒட்டு மொத்தமாக தற்போது 7 HMPV தொற்றுகள் இந்தியாவில் உறுதி செய்யப்பட்டு இருப்பதாக அறிக்கை வெளியாகி இருக்கிறது, இது குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே பி நட்டா அவர்கள் கூறுகையில், 'இது ஏற்கனவே 2001 யிலேயே கண்டுபிடிக்கப்பட்ட ஒரு வைரஸ் தான், இதனால் பெரிதாக பாதிப்புகள் ஏதும் ஈராது, நிபுணர்கள் வைத்து ஏற்கனவே ஆலோசித்து விட்டோம்' என கூறி இருக்கிறார்.
யாருக்கேனும் சுவாச கோளாறுகள் இருப்பின் அவர்கள் உடனடியாக மருத்துவமனையை அணுக அறிவுறுத்தப்பட்டுள்ளது, மற்றபடி கொரோனோ காலத்தில் கடைப்பிடித்த மாஸ்க், கைகளை முறையாக கழுவுதல், கூட்டங்களாக சேராமல் இருத்தல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மருத்துவமனைகளும், தனி நபர்களும் எடுக்க கோரிக்கை விடப்பட்டுள்ளது.