நவீன தொழில்நுட்ப முன்னேற்றங்களின் விளைவாக 2024-ஆம் ஆண்டில் சில முக்கிய துறைகள் மிகப்பெரிய வளர்ச்சியைக் கண்டுள்ளன. அதில் இன்டர்நெட் மற்றும் இ-காமர்ஸ் துறைகள் முக்கியமானவை.
உயர்ந்த இன்டர்நெட் தேவை & ஸ்மார்ட்போன் பயன்பாடு, சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர்களின் வருகை, டிஜிட்டல் கட்டண முறை மூலம் இந்த இன்டர்நெட் மற்றும் இ-காமர்ஸ் துறைகள் மிக பெரிய வளர்ச்சியை அடைந்து இருக்கிறது. இதனால் இந்த துறையில் 15 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ள சீனியர்கள் வருடத்திற்கு ₹37 லட்சம் வரை சம்பளம் பெறுகின்றனர்.
ரெண்ட்ஸ்டாட் இந்தியா வெளியிட்ட அறிக்கையில், திறமையான தொழில் முனைவோர்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. 2023-ஆம் ஆண்டு கன்சல்டண்டுகள் அதிக சம்பளம் பெற்றிருந்த நிலையில், 2024-ஆம் ஆண்டில் இன்டர்நெட் & இ-காமர்ஸ் துறையினர் அவர்களை மிஞ்சி உயர்ந்த சம்பளத்தைப் பெற்றுள்ளனர்.
தொழில்நுட்ப வளர்ச்சியால் இந்த துறைகளின் எதிர்காலம் இன்னும் அதிக வளர்ச்சியை காண வாய்ப்புள்ளது.